tamilkurinji logo


 

கைக்காசு,,,-விமலன்,கைக்காசு,,,

கைக்காசு,,,
கைக்காசு,,,-விமலன்

First Published : Wednesday , 6th March 2013 11:54:39 PM
Last Updated : Thursday , 7th March 2013 12:02:48 AM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

கைக்காசு,,,-விமலன்,கைக்காசு,,,

 

, எந்தப் பக்கம் கையை விட்டபோதிலும் அவரது உடம்பிலிருந்து ரூபாயை எடுத்து விடுகிறார். விட்டால் எட்டு திசகளிலும் இருந்து எடுப்பார் போலிருக்கிறது. வலதுபக்கம் கையைவிடுகிறார். மடித்து கட்டப்பட்டிருந்த கட்டம் போட்ட லுங்கியை மீறி வெளித் தெரிந்த அண்டர்வேர் பாக்கெட்டிலிருந்து ரூபாயை டுக்கிறார்.

இடதுப்பக்கம் கையை விடுகிறார். மேல் சட்டைப்பையிலிருந்து நோட்டுக்களாய் எடுத்துப் போடுகிறார். . அதுபோலவே சட்டையின் உள் பை அண்டர் வேர் பாக்கெட்டின் இடது பக்க லுங்கியின் சுருட்டிய மடிப்பிலிருந்து,,,,, என எல்லாப்பக்கமிருந்தும் எடுகிறார்.

எல்லாம் மூன்றாய்,இரண்டாய் மடிக்கப்பட்டிருந்த பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுக்கள் கசங்கலாய்.

நான் மற்றும் எனது சக ஊழியர் இருவருமாய் அலுவலகம் விட்டு வந்துகொண்டிருந்த நேரமிது

,நேற்று இரவு கண் மூடிக்கொண்ட மின் வெட்டினால் சரியாக தூங்காத  தூக்கம் இப்போது வந்து இமைகளை இழுக்க "தூக்கம் ன் கண்களை தழுவட்டுமே"என அசரீரி ஒலிக்கிறது. அல்லது ஒலிப்பதாய் படுகிறது.

ஆகா . இதெல்லாம் சரிப்படாது. இரு சக்கர வாகனத்தில் குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும் அது எப்படி தூக்கம் கப்ப வண்டியை ஓட்டுவது சரியாக இருக்கும்?

உடலும், மனமும், புத்தியும் ஒரு சேர மிகவும் கவனமாக பயணிக்கா விட்டாலும் கூட ஏதோ ஓரளவு பயணித்து ஆக வேண்டுமே என்கிற உயர் ரக எண்ணத்தில் தற்சமயம் தூக்கம் விலக்க ஒரு டீ சாப்பிடலாம் என்கிற முடிவில் தேநீர் கடை முன்பு நிற்கிறோம்.

வழக்கமாக டீ சாப்புடுகிற கடைதான் அது. சக்திதாசன் கடை.. காலை,மாலை இருவேளையும் பெரும்பாலும் அங்குதான் டீ சாப்பிடுவேன் . நேரமிருக்கிற தினங்களில் டீக்கடைகள் எப்போதும் ஏழைகளையும், அன்றாடர்களையும் தன்னுள் தக்கவைத்துக் கொண்டும் உள்ளிழுத்துக் கொள்கிறதுமான உயிர் உருவாய்த் தெரிகிறது

. கோயில்களுக்கு அடையாளமாய் இருக்கிற கோபுரம் போல டீக்கடைகளுக்கு அடையாளமாய் பாய்லரும், பால்ச் சட்டியும், டிக்காக்‌ஷன் பையும் போலும்.  

நாங்கள் சென்றநேரம் சூடாக வடையும் , பஜ்ஜியும் இருந்தது .வேறுவழியில்லை.அந்த விலைக்கு அப்படித்தான் சுட்டுத் தரமுடியும் . ஏதோ ஒரு மாவை பிசைந்துஉள்ளே நறுக்கிய வெங்காயத் துண்டுகளையும், மிளகாய்த் துண்டுகளையும்வைத்து சுட்டெடுத்தவடையும், பஜ்ஜியும் பார்க்க செந்நிறக்கலர் கொண்டு எண்ணெய் பூசி மாலைவெயிலில் மின்னும்.

இரண்டு ரூபாய்க்கு பின்எப்படித் தரமுடியும். அவர்களால்கேட்க முடிகிற போதும் கூடஇங்கு இவ்வளவுதான் விற்க முடியும், அதற்குமேலானால் விற்கமுடியாது.வாங்கவும் மாட்டார்கள்.

ஸ்கூல்போகிற பிள்ளைகளுக்கும் கூலி வேலையில் சம்பாரிக்கிறவர்களுக்கும் இதுதான் லாயக்கு. இரண்டுஅல்லது மூன்று வடை,அல்லது பஜ்ஜிகளைபிய்த்துப் போட்டு தண்ணீரான சட்னியும், சாம்பாரும் விட்டுச் சாப்பிட்டால் அந்நேரம்வயிறு நிறைந்த திருப்தி என டீக்கடை உரிமையாளர் சொன்ன போது தஞ்சாவூரில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஒரு டீ 88 ரூபாய்க்கு குடித்த ஞாபகம் வருகிறது.(வேண்டாம்,வேண்டாம் எனச்சொல்ல அலுவலக மேலாளர் கொடுத்த பார்ட்டியில் நடந்த விபத்து அது.)அம்மாதிரியான கொடுமையான விபத்துக்கு இது மிகவும் தேவலாம்.

நானும் என் உடன் வேலை பார்ப்பவருமாய் சென்ற மாலைப்பொழுதுக்கு டீயும் ,வடையும் ரெடியாகஇருந்தது. நான்ஒருகடி, ஒருகுடி என்கிறவகையில் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்த போது உடன்வந்தவர் எதுவும்வேண்டாம் எனச்சொல்லிவிட்டார்.(உடம்பைப் பேணுகிறாராமாம்)

குடித்தடீக்கும், கடித்தவடைக்குமாய் கொடுக்க காசு தேடிய போது பையில் சில்லறைகள் தவிர்த்து நூறுரூபாயாய் தட்டுபட்டது ."

சில்லறைஇல்லண்ணே",என்றவாறு முழுத்தாளாய்க் கொடுத்த போது எங்களுக்கு மிச்சச் சில்லறை கொடுக்க எத்தனித்தபோதுதான் இப்படி..

எண்ணன்னே இப்படி என்ற போது அவர் சொல்கிறார். பலச்சரக்குக்கு, பாலுக்கு, திடீர்ன்னு சீனி வாங்க,,,,,,,,இப்பிடி எல்லாத்துக்கும் தனித்தனி சார்.

ஒங்கள மாதிரி எல்லாரும் குடுக்குற போது அதத அங்கங்க வச்சிருவேன் சார் என்கிறார். அவரது உடம்பில் எந்தப்பக்கம் கைவிட்ட போதிலும் பணம் வருகிறது.விட்டால் எட்டு திசையிலிருந்தும் பணம் எடுப்பாரோ?

பெயர் விமலன்    Tags :    
கைக்காசு,,,-விமலன்,கைக்காசு,,, கைக்காசு,,,-விமலன்,கைக்காசு,,, கைக்காசு,,,-விமலன்,கைக்காசு,,,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ' பாவிகள்!' சு.செந்தில்ராஜ் ஆசிரியர், தமிழ்குறிஞ்சி.
ஆதவன்  மேற்கில்  மறைந்து  கொண்டிருந்தான்.  டிசம்பர்  மாதத்துக்  குளிர்  சில்லென்று  இறங்கிக்  கொண்டிருந்து.  நான்  அந்தக்  குளக்கரையின்  மீது  நடந்து  கொண்டிருந்தேன்.  குளிர்  கலந்த  காற்று  மென்மையாய்  முகத்தை  வருடிச்  சென்றது.இடது  பக்கம்  குளத்து  நீர்  சலசலத்தது.  வலது  பக்கம்  கண்ணுக்கெட்டிய

மேலும்...

 சார்! கார்த்துடைக்கனுமா?
உடல் முழுக்க வியர்வையுடனும், நெஞ்சு நிறைய வெப்பத்துடனும், தன் இயலாமையால் எழுந்த கோபம், ஆத்திரம், கவலை, பயம் என உணர்ச்சிகளின் கலவையாய் வீட்டினுள் நுழைந்தான் முரளி. சமீபத்தில் ஒரு அரசு நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று விட்ட அப்பா ஈசிச் சேரில் கண் மூடிச்

மேலும்...

 மலரும் முள்ளாகும்
எல்லாம் முடிந்து விட்டது. அவள் பிரிந்து விட்டாள். கோர்ட் பிரித்து விட்டது. அவள் பிரிந்ததைப் பற்றிக் கூட அவன் கவலைப்படவில்லை. ஆனால் அதற்காக அவள் எப்படியெல்லாம் பொய் சொன்னாள்? என்னென்ன பழியையெல்லாம் அவன் மீது சுமத்தினாள்? அதைத்தான் அவனால் தாங்க முடியவில்லை.

மேலும்...

 பரவால்ல விடுங்க பாஸூ… - சதங்கா
அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். ந‌ம்மூர்க்கார‌ங்க‌ மூனு பேரும், வெள்ளைக்கார‌ங்க‌ நாலு பேரும். இந்த‌ காம்பினேஷ‌ன்லேயே புரிந்திருக்கும் அது ஒரு மென்பொருள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அலுவ‌ல‌க‌ மீட்டிங்க் என்று. உங்கள் நம்பிக்கையைத் தகர்க்க விரும்பவில்லை :) ) அதே தான்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164