tamilkurinji logo


 

சார்! கார்த்துடைக்கனுமா? ,story kathai,tamil kathai

story,kathai,tamil,kathai
சார்! கார்த்துடைக்கனுமா?

First Published : Thursday , 11th April 2013 04:58:03 AM
Last Updated : Thursday , 11th April 2013 08:19:59 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

சார்! கார்த்துடைக்கனுமா?

,story kathai,tamil kathai

உடல் முழுக்க வியர்வையுடனும், நெஞ்சு நிறைய வெப்பத்துடனும், தன் இயலாமையால் எழுந்த கோபம், ஆத்திரம், கவலை, பயம் என உணர்ச்சிகளின் கலவையாய் வீட்டினுள் நுழைந்தான் முரளி.

சமீபத்தில் ஒரு அரசு நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று விட்ட அப்பா ஈசிச் சேரில் கண் மூடிச் சாய்ந்திருந்தார். நெற்றியில் ஒவ்வொரு மகளை கரையேற்றிய போதும் நிரந்தரமாய் விழுந்து விட்ட கவலைச் சுருக்கங்கள். உடம்பில் தளர்ச்சி..

"ப்ச் ... வழக்கம் போல இதுவும் ஒரு கண்துடைப்புத்தான்ப்பா" என்று வார்த்தைகளில் விரக்தியை தோய்துச் சொன்னான். அவனது பதிலால் அப்பா கோபமானார்.

"ஆமாடா எல்லாமே உனக்கு கண்துடைப்புத்தான். அவன் கேட்கிற கேள்விக்கு நீ ஒழுங்கா பதில் சொல்லியிருக்கனும் அதை விட்டுட்டு விதண்டா வாதம் பண்ணியிருப்பே போடான்னு புடதியப் புடிச்சு வெளியே தள்ளியிருப்பான்"

வாசலில் நிழலாடியதை உணர்ந்து கண் விழித்தவர் மகனைக் கண்டதும் "இண்டர் வியூ என்னடாச்சு?" என்றார்கமல் ஏன் வாணிய விவகாரத்து செய்தார்? தற்போதைய கல்வியமைச்சர் யார்? அடுத்து மீண்டும் பதவியேற்கப் போகும் மாஜி அமைச்சர் யார்? என்றெல்லாம் கேள்வி கேட்டா எப்படிப்பா பதில் சொல்ல முடியும். இவனுகளுக்கு நேரம் போகலைனா என்னை மாதிரி ஆளுகளை கூப்பிட்டு வச்சு விளையாடுரானுக"

ஆமாண்டா அவனுகளுக்கு வேற வேலையில்லை பாரு அதான் உன்னை இண்டர் வியூக்கு கூப்பிட்டு விளையாடரானுக. அவனுக கைல்ல, கால்ல விழுந்து கெஞ்சனும் அதை விட்டுட்டு நீ திமிரா பதில் சொல்லியிருப்ப உனக்கு எவன் வேலை தருவான்"

இவர் வேறு எரிகிற கொள்ளியில் எண்ணை வார்த்து விட்டார். முரளி எரிச்சலானான். இவனது எரிச்சலையும், கோபத்தையும் யாரிடம் காட்ட முடியும். வீட்டில் தங்கையிடமோ, தாயிடமோ காட்டினால் அடுத்த வேளை சாப்பாடு கிடைக்காது. இப்பொழுதே பசி வயிற்றைக் கிள்ளியது.

வீட்டினுள் எட்டிப்பார்த்தான் தங்கை ஏதோ நாவலில் மூழ்கியிருந்தாள். சாப்பாடு போடு என்று சொல்ல பயம் 'ஆமா பெரிய இவரு உழைச்சு களைச்சுப்போயி வந்திருக்காரு, வந்த உடனே சாப்பாடு போட்றனும்' என்று குத்தலாய்ப் பேசுவாள்.

மெதுவாய் சமையலறைக்குள் நுழைந்து ஆராய்ந்தான். மதியம் சாப்பாட்டுக் கடையை முடித்து எல்லாவற்றையும் கழுவிக் கவிழ்த்தியிருந்தனர். இவன் பாத்திரங்களை உருட்டும் சப்தம் கேட்டு தங்கை வந்து விட்டாள்.

என்ன? சாப்பாடு தானே போ, நான் கொண்டுவர்ரேன்" ஆச்சரியப்பட்டான். எல்லாவற்றையும் சுத்தமாய் கழுவி வைத்திருக்கும் போது எங்கிருந்து சாப்பாடு வரும். கை கழுவிக் கொண்டு அமர்ந்தான்.

உனக்காக எடுத்து வச்சிருந்தேன்" என்று கூறிக் கொண்டே நேற்று மீதப்பட்டுப் போன பழைய சோற்றில் தண்ணீரும், மோரும் கலந்து ஒரு தட்டு நிறைய வைத்தாள். தொட்டுக் கொள்ள ஒரு ஊறுகாய்த்துண்டு அந்தக் காலத்தில் வீட்டில் ஆடு, மாடு மேய்க்கும் பையன்களுக்குக் கொடுப்பார்களே அதே போல்.

முரளி தட்டில் கை வைத்து அளைந்தான். பிறகு ஒரு வாய் எடுத்து வைத்தான். உப்புப் போதவில்லை. நிமிர்ந்து பார்த்தான் தங்கை மீண்டும் நாவலில் மூழ்கியிருந்தாள். கண்ணில் குபுக்கென்று நீர் வந்து விட்டது. இப்பொழுதெல்லாம் கோபமோ, ஆத்திரமோ வரும் போதும், அதை யாரிடமும் காட்ட இயலாத போதும் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறத

இதே வீட்டில் இவன் படித்துக்கொண்டிருந்த போது இவனுக்குக் கிடைத்த ராஜ மரியாதை தான் என்ன? பட்டப் படிப்பில் தங்க மெடல் வாங்கி , மேல் படிப்புப் படித்த போது, என் மகன் பெரிய படிப்புப் படிக்கிறான், கை நிறைய சம்பாதிக்கப் போகிறான் என்ற பெருமையில், எதிர்பார்ப்பில் இவனுக்கென்று ஸ்பெசலாய் எண்ணை சொட்டச் சொட்ட தோசை வார்த்துக் கொடுத்த அம்மா, அண்ணா... அண்ணா என்று சுற்றி வந்து, என்னண்ணா அதுக்குள்ள எழுந்துதட்ட இன்னும் கொஞ்சம் சாதம் போட்டுக்கோ என்று உபசரித்த தங்கை, சினிமாவுக்குப் போக அப்பாவிடம் காசு கேட்கப் பயந்து கொண்டு இவனது பாக்கெட் மணியில் ஒன்னே கால் ரூபாய் வாங்க தலையைச் சொறிந்து கொண்டு நின்ற தம்பி. ! எல்லோருமே எப்படி மாறி விட்டார்கள்? அன்று அப்படி உபசரித்தவர்கள், இன்று எப்படியெல்லாம் உதாசீனப் படுத்துகிறார்கள்.

கதைகளில் கூட வேலையில்லாப் பட்டதாரியை இவ்வளவு தூரம் அவமானப் படுத்தியதாகப் படித்ததில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் சாப்பிட தொடங்கிய போது கண்ணீரின் உபயத்தால் இப்போது உப்பு சரியாய் இருந்தது.

மாலையில் கடற்கரையில் கார்த்திகாவுக்காகக் காத்திருந்தான். முரளியின் கோபத்திற்கும், தாபத்திற்கும் ஒரே வடிகால் கார்த்திகாதான். அவள் மட்டும் இல்லையெனில் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பான்.

அவனை மடியில் கிடத்திக் கொண்டு 'இதுக்கா முரளி இவ்வளவு வருத்தப்படற லீவ் இட் என்று கூறி ஆதூரமாய் அவன் தலையைக் கோதி அன்பாய் அந்த அழகிய இதழ்களைக் குவித்து அவன் நெற்றியில் பதிப்பாள். அந்த நொடியில் அவனது அத்தனை கவலைகளும் மறந்து போகும்.

தூரத்தில் நடந்து வரும் கார்த்திகாவைக் கண்டதும் ஒரு சின்ன சந்தோசம் மனதுள் வந்து உட்கார்ந்து கொண்டது. கார்த்திகா நெருங்கி வந்து அவனருகில் அமர்ந்தாள்.

அவளுக்குள் ஏதோ போராட்டம் நடக்கிறது என்பதை அவளது முகமே காட்டிக் கொடுத்தது, அந்த அழகிய முகத்தில் வாட்டத்தைக் கண்டதும் முரளியின் மனதுள் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்ச சந்தோசமும் வடிந்து போனது. மனம் ஏனோ பரபரத்தது. வேண்டாத எதையோ எதிர்பார்ப்பது போல் படபடத்தது.

கார்த்தி என்னம்மா ஒரு மாதிரி இருக்க. இந்த உலகத்துல எனக்கு மட்டும் தான் கவலை இருக்குன்னு நினைச்சேன். உனக்குக் கூடவா கவலை.

எங்கே அழுது விடுவாளோ என்று பயந்தான். அவள் அழுதால் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அவனிடமில்லை உதட்டை மடித்துக் கடித்தாள். அழுகையைக் கட்டுப் படுத்தும் முயற்சி.

"இன்னைக்கு இண்டர் வியூக்குப் போனியே என்னாச்சு?"

"ப்ச்"

இந்த சூள் கொட்டுதலின் அர்த்தம் அவளுக்குத் தெரியும்.

முரளி, உனக்கு அடுத்த ஜென்மத்திலேயாவது வேலை கிடைக்குமா?" அவன் மனதுள் பட்டென்று ஏதோ ஒன்று அறுந்து போனது.

"என்ன கார்த்தி ஒரு மாதிரியா பேசற?"

"முரளி உனக்கு வேலை கிடைக்கும் னு இதுவரை காத்துக்கிட்டிருந்தேன். இன்னும் கூட காத்திருப்பேன். ஆனா அப்பா ரொம்ப மும்முரமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டார். இனி மேலும் அப்பாவை என்னால ஏமாத்திட்டு உனக்காக காத்திருக்க முடியாது. முரளி அதனால நான்.... நான்... கல்யாணத்துக்குச் சம்மதிச்சுட்டேன்."

"கார்த்தி நீ என்ன சொல்ற?"

அவள் பதில் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். பிறகு தன்னைத் திடப்படுத்திக் கொண்டவள் போல் பேசினாள்.

"சாரி முரளி தயவு செய்து என்னை மறந்துரு. இனி என்னை சந்திக்க முயற்சி செய்யாதே. திரும்பவும் நான் உன்னை சந்திச்சா என்னால தாங்க முடியாது. இனிமேல் என்னை சந்திக்காதே ப்ளீஸ்"

கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள் அவன் கரத்தைப் பற்றி கண்ணீரோடு இதழ் பதித்து விட்டு நடந்தாள்.

இந்த சம்மட்டித் தாக்குதலை அவன் எதிர்பார்க்க வில்லை. அவள் நடந்து, தொலைவில் புள்ளியாய் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் போல் இருந்த நம்பிக்கையையும், இருந்த ஒரே ஆறுதலையும் பறி கொடுத்து விட்டு பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான். மனம் வெறும் பாலைவனமாய் மாறிப் போனது.

மனம் சந்தோசமாய் இருந்த போது சுண்டல் விற்பவனின் கூச்சலும், கடல் அலையின் இரைச்சலும் கூட இன்பமாய் இருந்தது. இப்போது எல்லாமே நாரசமாய் ஒலித்து எரிச்சலேற்படுத்தியது.

இரவு நெடு நேரத்திற்குப் பிறகு வீட்டை அடைந்து கதவைத் தட்டினான். அப்பா தான் திறந்தார், அர்ச்சனையோடு.

"ஏண்டா வீட்டுக்கு வர்றதுக்கு ஒரு நேரம் காலம் கிடையாதா. நெனைச்ச நேரத்துக்கு வர்ரதுக்கும், போறதுக்கும் இது என்ன சத்திரம்னு நினைச்சியா. ராஸ்கல் இன்னைக்கு வெளியவே படுத்துக்கிட அப்பத்தான் உனக்கு புத்திவரும்" என்று இறைந்து விட்டு முகத்திலறைந்தார் போல பட்டென்று கதவை அறைந்து சாத்தினார்.

வீட்டை ஒட்டி இருந்த திண்ணையில் படுத்துக் கொண்டான். இரவு நெடு நேரம் வரையில் தன்னைப்பற்றியே சிந்தித்து, மனதுள் அழுது கொண்டிருந்தவன் அப்படியே உங்கிப் போனான்.

"ஏண்டா மூதேவி காலைல எட்டு மணி வரையிலும் தூங்கினா உருப்பட்டாப் பலதான்" அம்மாவில் குரல் கேட்டு விழித்துக் கொண்டான். அம்மாவைப் பார்த்தான் கோபமாய் நின்று கொண்டிருந்தாள்.

"என் ராசா எழுந்திரிப்பா. இந்தா காப்பி குடி . ஏம்பா ராத்திரி ரொம்ப நேரம் படிச்சியா?"

'அதிருக்கட்டும்மா. தம்பிக்கு காப்பி குடுத்தியா?'

' ஆமா, அந்த மூதேவிக்கு அது ஒன்னுதான் குறைச்சல். தண்டச்சோறு ஊர் சுத்திட்டு வந்து படுத்திருக்குது. நீ காப்பி குடிச்சிட்டு படிப்பா.'

அந்த அம்மாவா இவள்.

பாவம் அவள் தான் என்ன செய்வாள்? அவள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளும், கனவுகளும் நிறைவேறாமல் போன ஆத்திரம் கோபமாக இவன் மீது திரும்பி இருக்கிறது.

வெறுமையாய் சிரித்தவன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான். ஓரு வாரத்தாடி முள்ளாய் குத்தியது. போன வாரம் சவரம் செய்து கொள்ள தம்பியிடம் காசு கேட்ட போது 'இவரு பெரிய கலெக்டர் உத்தியோகத்துக்குப் போறாரு. அவசியம் ஷேவ் பண்ணிக்கனும். மொகறையப் பாரு போடா' என்று நெஞ்சைக் கீறினான். இன்னும் கூட அந்த ரணம் ஆறவில்லை.

காக்கி யூனிபார்மில் ஒர்க் ஷாப்புக்குப் செல்ல புறப்பட்டு வந்த தம்பி "என்னடா கன்னமெல்லாம் ஒரே பொதறா இருக்கு. இந்தா போய் ஷேவ் செய்துக் கோ" என்து கூறி இரண்டு ரூபாய்த் தாளை வீசி எறிந்தான். அவனை முரளியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எட்டாம் வகுப்பில் படிக்கும் போது வாத்தியார் அடித்து விட்டார். என்பதற்காக அவர் தலையைக்கல்லால் பதம் பார்த்து விட்டு ஓடிவந்தவன் பிறகு பள்ளிக்கூடப் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்கவில்லை. இன்றைக்கு மெக்கானிக்காகி, சிறிதாக ஒர்க் ஷாப் வைத்திருக்கிறான். அவனது வருமானத்திலும், அப்பாவின் பென்ஷனிலும் தான் குடும்பம் நடக்கிறது.

தம்பி வீசி எறிந்த இரண்டு ரூபாய் தாளை பொறுக்கி எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு சலூனை நோக்கி நடந்தான்.

" ஷேவ் செய்யனும்"

"அப்படிப் போய் ஓரமா உக்காருங்க தம்பி. வேலை வெட்டி இல்லாத ஆள்தான நீங்க. இவங்கல்லாம் வேலைக்கிப் போறவங்க இவங்களுக்கு முடிச்சிட்டு வர்ரேன்"

ஏன் திரும்புகிற பக்கமெல்லாம் இப்படி வார்த்தைச் சவுக்கால் அடிக்கிறார்கள். ஆண்டவன் இவர்களுக்களுக்கு நாக்கை சாட்டையாகப் படைத்து விட்டானா?

முரளி நத்தையாய் சுருங்கிப் போய் ஓரமாய் அமர்ந்தான்.

நேர்முகத் தேர்வு நடந்த இடத்தில், தன் பெயரைக் கூட சரியாக எழுதத் தெரியாத பியூன் " யோவ் ஏய்யா இப்படி கூட்டமா நிக்கறீங்க. போய் ஓரமா உக்காருங்கய்யா" என்று விரட்டினான். யாரும் எதிர்த்துப் பேசவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். எங்கே அவனை எதிர்த்துப் பேசப் போய் வேலைகிடைக்காமல் போய் விடுமோ என்ற பயம் அவர்களை ஊமைகளாக்கியது.

தன்னைப் போலவே இந்த உலகில் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து போது முரளி மனதுள் சிரித்துக் கொண்டான்.

இண்டர் வியூ நடக்கும் போதே யாரோ ஒரு 'பெரிய மனிதரிடமிருந்து' போன் வந்தது. மேனேஜர் போனில் குழைந்தார். அப்போதே முடிவு சேய்து விட்டான் இந்த வேலை நமக்கு கிடைக்காதென்று.

இண்டர் வியூ முடிந்து வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் பீச் ரோட்டில் நடந்தான். அப்பா மனதிற்குள் வந்தார்.

'டேய் இந்த இண்டர் வியூவையும் ஒழுங்காச் செய்யாம இதுவும் கண்துடைப்பு, அது. இதுன்னு சொல்லிக்கிட்டு வீட்டுப் பக்கம் வந்திடாதே' அவர் ஏதோ கோபத்தில் தான் கூறினார் என்றாலும் அவனை அது மிகவும் பாதித்திருந்தத

பீச்சில் சிறுவர்கள் கார்களை துடைத்துக் கொண்டிருந்தார்கள். நாமும் இது போல் ஏதாவது ஒரு வேலை ஏன் செய்யக் கூடாது? என்று தோன்றியது. நிச்சயம் மூட்டை தூக்க முடியாது. அட்லீஸ்ட் காராவது துடைக்கலாமே.

அவன் யோசித்துக் கொண்டிருந்த போதே அவனருகே ஒரு மாருதி வந்து நின்றது. அதிலிருந்து ஒரு இளம் பெண்ணோடு சென்ட் கமகமக்க இறங்கியவினிடம் "சார், நான் கார் துடைக்கட்டுமா?" என்று கேட்டான

அதற்குள் எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு சிறுவன் காரைத் துடைக்கத் தொடங்கினான்.

முரளியை மேலும் கீழும் பார்த்த கார் ஆசாமி " ஏன் சார் உங்களைப் பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுது. கையில சர்ட்டிபிக்கட்ஸெல்லாம் வச்சிருக்கீங்க. நீங்கள்லாம் கார் துடைக்க வந்தா இவனை மாதிரி சின்ன பையனுகள்லாம் எங்க போவானுக" என்று கூறி கிண்டலாய்ச் சிரித்து விட்டு அந்தப் பெண்ணை அணைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.

முரளி கையிலிருந்த ஃபைலைப் பார்த்தான். ஏதோ வெறி பிடித்தவன் போல அத்தனையையும் மொத்தமாய் கிழித்து கடல் காற்றில் பறக்க விட்டான்.

காரைத் துடைத்துக் கொண்டிருந்த சிறுவன் அவனைப் பார்த்து சினேகமாய்ச் சிரித்தான். நீங்கள் கூட முரளியைப் பார்த்திருக்கலாம். பீச் கார் பார்க்கிங்கில் பரட்டைத் தலையோடு, உயரமான ஒருவன் நைந்து கிழிந்து போன பேண்ட் , சர்ட்டோடு ரொம்பப் பொறுமையாய் கார் துடைத்துக் கொண்டிருப்பான். அவன் தான் முரளி

அவன் ஒரு நாளைக்கு பத்து ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறான் சார்!    Tags :    
சார்! கார்த்துடைக்கனுமா?

,story kathai,tamil kathai சார்! கார்த்துடைக்கனுமா?

,story kathai,tamil kathai சார்! கார்த்துடைக்கனுமா?

,story kathai,tamil kathai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 டென்னிஸ் - ந.பிச்சமூர்த்தி
மழைக் காலம் ஆரம்பித்து விட்டது. மக்களின் மனம் கொஞ்சம் குளிர ஆரம்பித்திருக்கிறது. வறட்சையால் தவித்த செடி, கொடி, பயிரினங்கள் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றன. வருமோ என்று ஏங்கிய ஜனங்களும் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றனர். பச்சைப் பசேலென்று வயல்கள் சிரித்துச் சிரித்து ஆடுகின்றன.

மேலும்...

 பின்னக் கணக்கில் தகராறு - தீபம் நா.பார்த்தசாரதி
இதெல்லாம் சகஜம் தான். சில 'காட்டரேட்' ஆப்பரேஷன்களுக்குப் பின் எனக்கே கண் பார்வை மங்கிச் சற்றுத் தள்ளி இருப்பவர்களை அடையாளம் புரியாதபோது மற்றவர்களுக்கு இப்படி நேர்வதைப் பற்றி அதிசயம் ஒன்றும் இல்லை. விருதுகளுக்குச் சிபாரிசு செய்யும் கமிட்டியில் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் என்ற

மேலும்...

 சாளரம் - புதுமைப்பித்தன்
அடையார் பஸ் மயிலாப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது. பஸ்ஸுக்குள் இருந்த மங்கிய 'பல்ப்' வெளிச்சம் இருட்டை எடுத்துக் காட்டுகிறது. பிரயாணிகளின் முகமும் மார்பும் தவிர வேறொன்றும் தெரியவில்லை. "டிக்கெட் ப்ளீஸ்"

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164