tamilkurinji logo
 

தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்,tamil news india news

tamil,news,india,news



செய்திகள் >>> தமிழகம்

தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்

First Published : Wednesday , 6th December 2017 12:52:20 PM
Last Updated : Wednesday , 6th December 2017 12:52:20 PM


தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்,tamil news india news


சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 90). நோய்வாய்ப்பட்டு இருந்த இவர் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.

இந்த நிலையில் ஒரு காலி இடத்தில் முதியவர் ஒருவர் பிணம் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது மகள் கமலாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கொன்று புதைக்கப்பட்ட பழனிசாமியின் மகள் கமலா அரிசிபாளையம் மாணிக்கம் தெருவில் உள்ள மஞ்சள் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

அவரது தந்தை பழனிசாமிக்கு வயதானதால் உடலில் புண்கள் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டு வந்தார். இதனை கமலா சரியாக கவனிக்கவில்லை. பழனிசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பள்ளப்பட்டியில் உள்ள கழிப்பிடம் அருகே படுத்துக் கொண்டு ஆங்காங்கு கிடைக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு வந்தார். சிலநேரங்களில் பசியால் மகளின் வீட்டிற்கும் செல்வார்.

இதனால் மன வேதனையடைந்த கமலா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். அவரை கருணை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்காக அவர் வேலைபார்க்கும் மில்லின் அருகே உள்ள கல்மாவு மில்லில் ஊழியராக வேலை பார்க்கும் சண்முகம் (45) என்பவரின் உதவியை நாடினார்.

தந்தை நோயால் அவதிப்படுவதை பார்க்க முடியாமல் தவித்து வருவதாக கமலா கூறினார். மேலும் அவரை கருணை கொலை செய்துவிடலாம் என்று நினைப்பதாகவும் கூறினார். அதற்காக ரூ.600-ஐ சண்முகத்திடம் கொடுத்தார்.

கடந்த 2-ந்தேதி சண்முகம், பழனிசாமியை தூக்கி சென்று அந்த கல் மாவு மில்லில் உள்ள ஒரு இருட்டறையில் போட்டார். மறுநாள் தவழ்ந்த படி வெளியே செல்ல முயன்ற பழனிசாமி முகத்தில் சண்முகம் கல்மாவு மூட்டையை தூக்கி போட்டார்.

மூச்சு திணறி பழனிசாமி இறந்தார். பின்னர் அந்த மில்லிலேயே காலியாக உள்ள ஒரு இடத்தில் குழித்தோண்டி அவரை புதைத்த சண்முகம் வழக்கம்போல தனது பணிகளில் ஈடுபட்டார். போலீசார் சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று பழனிசாமியின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

முதியவரை கொன்று புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்,tamil news india news தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்,tamil news india news தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவன் கைது
கள்ளக்காதல் விவகாரத்தால் முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய மனைவியை அடித்துக்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழைய சீவரத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மோனிகா (32). இருவரும் பெரும்புதூரில் உள்ள

மேலும்...

 முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -மு.க.ஸ்டாலின் ஆவேசம்
முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றபட்ட மு.க.ஸ்டாலின் கூறினார்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தன.இதன் பின்னர்

மேலும்...

 சென்னையில் இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை
சென்னையின் இரண்டு வெவ்வேறு இடங்களில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சென்னை பாதுகாப்பற்ற நகரமாகி வருகிறதா என்ற கேள்வி அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன.

மேலும்...

 கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்
கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை என்று கவர்னருக்கு பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் பதில் அளித்து உள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது 'தி வீக்'

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in