tamilkurinji logo


 

தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

First Published : Tuesday , 10th July 2018 07:26:39 PM
Last Updated : Tuesday , 10th July 2018 07:26:39 PM


தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

 திருப்பத்தூா் அருகே தனியாக வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி ஒன்றியத்தைச் சோ்ந்த அச்சரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகு என்பவர்  மகள் அழகுதேவி(17). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவா் செவ்வாய்கிழமையன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு வீட்டிற்கு அருகில் உள்ள  புதா் ஒன்றில் வீசப்பட்டுள்ளார்.


 செவ்வாய்கிழமை மதியம் விறகு வெட்டச் சென்ற விவசாயி ஒருவா் சிறுமியின் உடல் அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதைக் கண்டு கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோ, சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளா் மங்கலேஸ்வரன், உள்ளிட்ட போலீசாா் கொலை நடந்த இடத்தில் குவிந்தனா்.

மருத்துவக் கல்லூரியிலிருந்து மருத்துவா் செந்தில்குமாா் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. லைக்கா என்ற மோப்ப நாயும் சிறுமியின் வீட்டிலிருந்து சடலம் கிடந்த இடத்திற்கு மோப்பம் செய்து ஊா்கோடியில் உள்ள குளம் அருகே நின்று விட்டது.

மேலும் கொலை நடந்த வீடு மற்றும் சடலம் கிடந்த இடத்தை டி.ஐ.ஜி. காமினி ஆய்வு மேற்கொண்டு திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோ தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இறந்த சிறுமியின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை மருத்துவமனை கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.



தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்
மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது

மேலும்...

 தங்கை காதல் திருமணத்தால் அண்ணன் வெறிச் செயல்
மதுரையில் தங்கையின் காதல் கணவர் மற்றும் அவரது தாயார் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய நபரையும் அவரது ஆட்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை சந்தைப்பேட்டை பகுதியைச் பொன்ராஜ் என்பவர் வசித்து வந்தார்.  இவர் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அதே

மேலும்...

 பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-கடைமடை செல்லும் அளவுக்கு மேட்டூர்

மேலும்...

 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் கைது
சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது.11 வயது,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in