தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.


ஒரு வினாவுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 49 வினாக்களுக்கு மொத்தமாக 196 மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் தொடுத்த வழக்கில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் சிபிஎஸ்இக்கு 4 வினாக்களை எழுப்பி அதற்குப் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்வு நடத்த வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்த கொள்கையின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டதாகவும், மொழிபெயர்ப்பில் சரியான விடைகள் இல்லாவிட்டால் ஆங்கில விடைகள் இறுதியானது எனக் குறிப்பிட்டிருந்ததாகவும் வாதாடினார். இதையடுத்து, சிபிஎஸ்இ பெரும்பான்மை அடிப்படையில் விடைகளைத் தீர்மானிப்பதாகவும், சர்வாதிகார முறையில் செயல்படுவதாகவும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

பீகாரில் தேர்வு எழுதிய மாணவர்களைவிட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றது எப்படி என்றும் கேள்வி எழுப்பினர். வழக்கு நிலுவையில் இருந்தபோதே தேர்வு முடிவை வெளியிட்டுத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில்  49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


புதிய தரவரிசை பட்டியலை வெளியிட உத்தரவு:

எம்பிபிஎஸ் படிப்பில் சேர புதிய தரவரிசை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட வேண்டும் என CBSE-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதிய தர வரிசை பட்டியலை வெளியிடும் வரை MBBS கவுன்சிலிடிங்கை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை அடுத்து தமிழில் நீட் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தின் உத்தரவை கல்வியாளர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

https://goo.gl/NoHUuY






17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்