தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல்

தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக் ஆயுக்தாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். உச்ச நீத்திமன்றம் காலக்கெடு நாளையுடன் முடிவதால் இன்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

பீகார், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஆந்திராவை தொடர்ந்து தமிழகத்திலும் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  17 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.


முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை விசாரிக்க லோக் பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளது. 2013-ம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது. மத்திய அரசு சட்டப்படி மாநில அரசுகள் லோக் ஆயுக்தா வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றவில்லை. லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கு தமிழக அரசு பதில் அளித்தது.

 ஆனால், தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், லோக் ஆயுக்தா அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து வருகிற 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியது. நாளையுடன் சட்டப்பேரவை கூட்டம் முடிவடைய உள்ளதால், தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

https://goo.gl/tPLn1E


19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி