tamilkurinji logo
 

தலைமுடியை வெட்டும்படி கூறிய பேராசிரியர்களை சரமாரியாக கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் ,tamil news india news

tamil,news,india,news,


செய்திகள் >>> இந்தியா

தலைமுடியை வெட்டும்படி கூறிய பேராசிரியர்களை சரமாரியாக கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்

First Published : Sunday , 8th October 2017 12:29:42 PM
Last Updated : Sunday , 8th October 2017 12:30:13 PM


தலைமுடியை வெட்டும்படி கூறிய பேராசிரியர்களை சரமாரியாக கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் 
,tamil news india news

புனே லோனிகண்ட் பகுதியில் ஒரு ஜூனியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுனில் போர் (வயது18) என்ற மாணவர் படித்து வருகிறார்.


கடந்த வியாழக்கிழமை அன்று பேராசிரியர் தனஞ்சய் அப்னவே(33) என்பவர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது மாணவர் சுனில் போர் தலையில் தொப்பி அணிந்திருந்தார்.


அவரது தலை முடியும் அதிகமாக வளர்ந்து இருந்தது. இதை கவனித்த பேராசிரியர் தனஞ்சய் அப்னவே மாணவர் சுனில் போரை அழைத்து, தலைமுடியை வெட்டும்படியும், வகுப்பறையில் தொப்பி அணியாமல் ஒழுக்கமாக இருக்கும்படியும் அறிவுரை கூறி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

மற்ற மாணவர்கள் மத்தியில் தன்னை பேராசிரியர் அவமானப்படுத்தியதாக சுனில் போர் கருதினார். இதற்காக பேராசிரியர் தனஞ்சய் அப்னவேவை பழிவாங்க முடிவு செய்தார். நேற்றுமுன்தினம் பேராசிரியர் தனஞ்சய் அப்னவே பாடம் நடத்தி கொண்டிருந்த போது, வகுப்பறைக்கு வந்த சுனில் போர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.



இதில் அவருக்கு தலை, கழுத்து, வயிறு, கையில் பலத்த குத்து விழுந்தது. இதை பார்த்து மற்ற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தனஞ்சய் அப்னவேயின் சத்தம்கேட்டு பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த தர்‌ஷன் சவுத்ரி(30) என்பவர் ஓடி வந்து தடுக்க முயன்றார்.

அவரையும் மாணவர் சுனில் போர் தாக்கினார். இதில், அவருக்கு நெற்றியிலும், கையிலும் குத்து விழுந்தது. இதையடுத்து சுனில் போர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


படுகாயம் அடைந்த பேராசிரியர்கள் இருவரையும் மற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாகோலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


சம்பவம் குறித்து லோனிகண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் சுனில் போரை வலைவீசி தேடி வருகின்றனர். வகுப்பறையில் பேராசிரியர்களை மாணவர் கத்தியால் குத்தி வெறிச்செயலில் ஈடுபட்ட இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமுடியை வெட்டும்படி கூறிய பேராசிரியர்களை சரமாரியாக கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் 
,tamil news india news தலைமுடியை வெட்டும்படி கூறிய பேராசிரியர்களை சரமாரியாக கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் 
,tamil news india news தலைமுடியை வெட்டும்படி கூறிய பேராசிரியர்களை சரமாரியாக கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் 
,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆந்திராவின் வனப்பகுதி ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் மீட்பு
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். செம்மரங்களை மடக்கி பிடிக்கும் ஆந்திர மாநில போலீசார் தமிழர்களை சிறைபிடித்து வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் இன்று

மேலும்...

 கர்ப்பிணிப் பெண் துண்டுதுண்டாக வெட்டி கொலை
ஐதராபாத்தில் கர்ப்பிணிப் பெண்ணை பளிங்குக் கல் வெட்டும் எந்திரத்தில் துண்டாக துண்டாக வெட்டி கொலை செய்தவர்களை நீண்ட விசாரணைக்கு பின் வீடியோவில் கிடைத்த வழுக்கைத் தலை காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர்.இது குறித்து ஐதராபாத் போலீஸ் ஆணையர் சந்தீப் ஷான்டில்யா

மேலும்...

 பிறந்த குழந்தையை 5 மாதமாக தாயிடம் தர மறுத்த மருத்துவமனை
டெலிவரிக்கு உண்டான பில் தொகையை செலுத்ததால் பிறந்த குழந்தையை 5 மாதங்களாக பெற்ற அன்னையிடம் மருத்துவமனை தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காபான் என்ற நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி

மேலும்...

 இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதல்வர் சந்திர பாபு நாயுடு : ஆய்வறிக்கையில் தகவல்
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துகள் கொண்ட முதல்வராக முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் சொத்துப் பட்டியலில் கடைசி இடத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இருக்கிறார்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in