tamilkurinji logo


 

திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி,mk stalin and mk alagiritamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

mk,stalin,and,mk,alagiritamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி

First Published : Friday , 14th September 2018 01:43:07 PM
Last Updated : Friday , 14th September 2018 01:43:07 PM


திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி,mk stalin and mk alagiritamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

திமுகவில் சேர தொடர்ந்து மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அழகிரி, அதை ஸ்டாலினிடம் கேளுங்கள், ஏன் சேர்க்கவில்லை என்று கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று காட்டமுடன் தெரிவித்தார்.

திமுகவில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அழகிரி திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

"திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத் தலைமையையும் - கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் திமுகவிலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார்" என அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

அந்த தருணத்தில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, தானும் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனும் ஆலோசித்து அழகிரியைக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக அழகிரி பேட்டி அளித்திருந்தார். அதில் பெரும்பாலும் ஸ்டாலின் எதிர்ப்பே அதிகம் இருந்தது. அதன் பின்னர் 2016-ல் கருணாநிதி தீவிர அரசியலிலிருந்து வயோதிகம் காரணமாக ஒதுங்கி ஓய்வெடுத்தபோது நேரில் வந்து சந்தித்தார்.

பின்னர் கருணாநிதி காலம் வரை திமுகவுக்குள் எந்தக் குழப்பமும் ஏற்படுத்தக்கூடாது எனக் கூறியிருந்தார். ஓய்வில் இருந்த கருணாநிதி தீவிர அரசியலுக்குத் திரும்பாமல் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். இந்த இடைவெளியில் ஸ்டாலின் திமுகவுக்குள் வலுவாகக் காலூன்றினார்.

கருணாநிதி மறைவுக்குப் பின் திமுகவுக்கு பெரும் சவாலாக இருப்பதுபோன்று காண்பித்த அழகிரி நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்பதை விமர்சித்தார். இந்நிலையில் ஸ்டாலின் திமுக தலைவரானார்.

திமுகவில் தன்னைச் சேர்ப்பார்கள் என அழகிரி காத்திருக்க, ஸ்டாலின் வாயே திறக்காமல் இரண்டாம் கட்டத் தலைவர்களைப் பேச வைக்கிறார். இதனிடையே தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கில்லை என அழகிரி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

திமுகவில் அழகிரிக்கான வாய்ப்பு குறைந்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கூறிவரும் நிலையில் அழகிரி மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அழகிரி பதிலளித்தார்.

உங்களுக்கு தொடர்ந்து திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? ஏன்

அது அவரைக் (ஸ்டாலினை) கேட்க வேண்டிய கேள்வி, அங்கே போய் காரணம் கேளுங்கள். அவரைக் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?

பழனி மாணிக்கம், முல்லை வேந்தன் போன்றோரை சேர்த்துக்கொண்டார்கள். உங்களைமட்டும் ஏன் சேர்க்க மறுக்கிறார்கள்?

பழனி மாணிக்கத்தை எப்போது நீக்கினார்கள்.

தேர்தல் தோல்வியில் நீக்கப்பட்டு பின்னர் கடிதம் கொடுத்து சேர்த்துக்கொண்டார்களே?

அதைத்தான் நானும் சொல்கிறேன். என்னை ஏன் சேர்க்கவில்லை, இதுபோன்ற கேள்விகளை அவரைப் போய் கேளுங்கள். அங்கு கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி,mk stalin and mk alagiritamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி,mk stalin and mk alagiritamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி,mk stalin and mk alagiritamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி
 சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியானார்கள். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 27 குழந்தைகள் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் தமிழக மக்களை பயத்தில் உறைய வைப்பது டெங்கு காய்ச்சல் தான்.ஆண்டுதோறும்

மேலும்...

  “ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல; வழக்கு தொடருவேன்”அமைச்சர் ஜெயக்குமார்
மீடூ’ விவகாரம் ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரது கருக்கலைப்பு தொடர்பாக அந்த பெண்ணின் தாயாருடன் அவர் பேசும் ஆடியோ இது தான் என்றும் சமூக

மேலும்...

 சென்னையில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்
சென்னையில் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிப்பதில் பணி யாளர்கள் அலட்சியம் காட்டுவதால் சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சென்னையில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று எழும் பூர்

மேலும்...

 கத்தியால் குத்தப்பட்ட கணவர் மரணம்- மனைவி, காதலன் கைது
திருவான்மியூரில் 2 நாட்களுக்கு தனது காதலன் மூலம் மனைவி நடத்திய கொள்ளை முயற்சி நாடகத்தில் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய இருந்த கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, நார்த்தாம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரவன் (30). மென்பொறியாளராக சென்னை தரமணியில் உள்ள ஒரு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164