திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின் அறிவிப்பு

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின் அறிவிப்பு
திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, திமுகவின் தலைவர் பதவி காலியாக இருந்தது.

தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்தத் தேர்தலில் வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாத நிலையில், கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இதில் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அன்பழகன் அறிவித்தார்.

இந்நிலையில் துரைமுருகன் வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலுவை முதன்மை செயலாளராக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்
https://goo.gl/KAfkYZ






14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

10 Dec 2018

கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்