திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை

திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை
திருப்பூர் பாளையகாடு காயத்ரி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (52). தொழில் அதிபர். தனியாக நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் மொத்தமாக நூல்களை வாங்கி விற்பனை செய்தும் வந்தார்.

இவருக்கு சிகப்பி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று மதியம் தொழில் அதிபர் அண்ணாமலை வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி சிகப்பி கணவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

அப்போது சுவிட்ச் ஆப் என வந்தது. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்தனர். பல்வேறு இடங்களில் அண்ணாமலையை தேடினார்கள்.

அண்ணாமலை தனது வீட்டின் அருகே குடோன் நடத்தி வந்தார். அங்கு சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த அண்ணாமலை குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அண்ணாமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொழில் அதிபர் தற்கொலை செய்த இடத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அண்ணாமலை எழுதி வைத்து இருந்த கடிதம் சிக்கியது.

அதில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரூ. 50 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளேன். அதனை திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் தன்னிடம் நூல் வாங்கி சென்றவர்கள் ரூ. 40 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளனர்.

அந்த பணத்தை அவர்கள் திருப்பி தராததால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என எழுதி வைத்துள்ளார்.

நூல் வாங்கிய வகையில் தனக்கு யார்?யார்? பணம் தர வேண்டும் என்பது குறித்து அவர்களின் பெயர், தர வேண்டிய தொகை ஆகியவற்றையும் எழுதி வைத்து இருக்கிறார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது சங்கமான யான் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் கடிதம் அனுப்பி இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் திருப்பூரில் கடன் தொல்லை, தொழில் நஷ்டம் காரணமாக தொழில் அதிபர்கள் 4 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொழில் அதிபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
https://goo.gl/PwVpiJ






17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்