tamilkurinji logo
 

திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்

First Published : Friday , 11th August 2017 10:21:33 AM
Last Updated : Friday , 11th August 2017 10:21:33 AM


திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


திருவண்ணாமலையில் வாழும் ‘மூக்குபொடி’ சித்தரிடம் டிடிவி தினகரன் நேற்று ஆசி பெற்றார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அவர், சிறையில் இருந்து விடுதலையான பிறகு, கட்சிப் பணியில் ஈடுபட போவதாக அறிவித்தார். இதையடுத்து, 2 அணியாக இருந்த அதிமுக, 3 அணிகளாக பிளவுபட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் ‘மூக்குபொடி’ சித்தரை நேற்று சந்தித்து தினகரன் ஆசி பெற்றார்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தின் முதல் தளத்தில் உள்ள வரவேற்புப் பிரிவு முன்பு தரையில் அமர்ந்து இருந்த ‘மூக்குபொடி’ சித்தரை, தினகரன் வணங்கினார். சுமார் 10 நிமிட தரிசனத்துக்குப் பிறகு, அண்ணாமலையை காரில் சுற்றி வந்து தரிசனம் செய்தார். பின்னர், தஞ்சைக்கு புறப்பட்டுச் சென்றார்


‘மூக்குபொடி’ சித்தரின் பக்தரும் உணவக உரிமையாளருமான ஆகாஷ் முத்துகிருஷ்ணன் கூறும்போது, ‘‘மூக்குபொடி’ சித்தரின் இயற்பெயர் மொட்டையக் கவுண்டர். ‘மூக்குபொடி’யை விரும்பி பயன்படுத்துவதால் ‘மூக்குபொடி’ சித்தர் என்று அழைக்கப்படுகிறார்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். அவருக்கு வயது 85-க்கு மேல் இருக்கும். ஒரு மகன் உள்ளார். மனைவி இறந்த பிறகு ஆன்மிகத்தை தேடிச் சென்றுள்ளார். வீரபத்திரசாமியை வழிபட்டு வந்துள்ளார்.

திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டுகளாக வாழ்கிறார். அவர் யாரிடமும் பற்று செலுத்துவது இல்லை. தன் மகன் மற்றும் பேரப் பிள்ளைகளிடமும் அப்படித்தான் இருப்பார். அதேபோல், அவரது ஆளுமைக்குள் யாரையும் அனுமதிப்பதும் கிடையாது.

ஒரு இடத்தில் 3 மாதங்களுக்கு மேல் இருக்கமாட்டார். சிதம்பரத்தில் அதிக காலம் தங்கியிருந்தார். பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருப்பார். திடீ ரென சாப்பிடத் தொடங்குவார்.

ஒவ்வொரு நிகழ்வுகள் மற்றும் தனிமனிதப் பிரச்சினைகளை ‘மறைபொருள்’ மூலமாக சுட்டிக்காட்டுவார். ‘தானே’ புயல் வருவதற்கு முதல் நாள் மதியம் கடலூருக்குச் சென்று, கடலைப் பார்த்து, ‘அமைதியாக இரு, சத்தம் போடாதே’ என்று பேசினார். மறுநாள், தானே புயல் தாக்கியது.

பணம் மதிப்பு நீக்கம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.500, ரூ.1000 தாள்களை கிழித்துப்போட்டார். கூடங்குளம் போராட்டம் தொடர்பான நிகழ்வையும் சுட்டிக்காட்டினார்.


அவரது அனுமதி இல்லாமல் அவரை யாரும் தரிசிக்க முடியாது. ‘மூக்குபொடி’ சித்தரை டிடிவி தினகரன் பலமுறை சந்தித்துள்ளார். ஆனால், ஒருமுறை கூட வெளியே தெரியவில்லை. இப்போது காட்சிப்படுத்துவதற்கான காரணம் புரியவில்லை. அவரை தரிசிக்க வரும் பக்தர்கள் (வெளிநாட்டினர் உட்பட) சிந்தனையில் குழப்பம் ஏதும் இல்லாமல் அமைதி ஏற்படுகிறது என்று கூறுவார்கள்’ என்றார்.


திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெண் கொலைவழக்கில் கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடமாமாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சுசீலா (வயது 55). இவர் நேற்று முன்தினம், தனது கரும்பு தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.இது குறித்த தகவலின் பேரில் மூங்கில் துறைப்பட்டு போலீசார்

மேலும்...

 பெற்றோர் கண்டித்ததால் துப்பாக்கியால் சுட்டு பள்ளி மாணவர் தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றிய பகுதியில் உள்ள பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சவரிமுத்து. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இவர் திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி டெய்சிராணி. இவர் பாலக்குறிச்சியில்

மேலும்...

 ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சி செய்கின்றனர் - எடப்பாடி பழனிச்சாமி
அ.தி.மு.க.வின் முக்கிய அணிகளான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதவல் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைந்தன. ஆனால், டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் முதலமைச்சருக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால், அரசுக்கு

மேலும்...

 கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்து கொன்று புதைத்த மனைவி
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்டின்(30). இவரது மனைவி இந்து(25). இவர்களுக்கு 6 ஆண்டுக்கு முன்பு திருமணமாகி, இரண்டரை வயதில் ஜியோன் என்ற மகன் இருக்கிறான். புதுடெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில், மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in