tamilkurinji logo
 

திருச்சி அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

tamil,news,,tamilseithigal,,,indiaseithigal,indianews,,tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள்,,தமிழ்,சினிமாசெய்திகள்



செய்திகள் >>> தமிழகம்

திருச்சி அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

First Published : Thursday , 7th December 2017 01:29:28 PM
Last Updated : Thursday , 7th December 2017 01:29:28 PM


திருச்சி அருகே  விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்


கன்னியாகுமரியிலிருந்து குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றவர்களின் சுற்றுலா வேன் திருச்சி அருகே நின்றிருந்த லாரிமீது பின்புறமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானார்கள். காயத்துடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி நாகர்கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(44) இவர் குடும்பத்தாருடன் டெம்போ டிராவலர் வேனில் திருப்பதிக்கு சென்றார்.

வேனை டிரைவர் ராகேஷ்(33) ஓட்டினார். திருச்சி வழியாக வேன் வந்துக்கொண்டிருந்தது.

அதிகாலையில்  டெம்போ டிராவலர் துவரங்குறிச்சி காச மோர்னிமலை அருகில் சென்றபோது சாலையில்  நின்றிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த போர்வெல் லாரியை ஓட்டுநர் கவனிக்காததால் லாரியின்  பின்புறத்தில் டெம்போ டிராவலர் வேன் பயங்கரமாக மோதியது.

 இதில் டெம்போ டிராவலர் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் பயணம் செய்த அத்தனை பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை தீயணைப்புத்துறையினர், போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.


சாலையில் உரிய பாதுகாப்பு விளக்கு போடாமல் லாரியை நிறுத்தியிருந்ததும், ஓட்டுநர் ராகேஷ் வேகமாக வந்ததில் கவனிக்காமல் மோதியதும் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


திருச்சி அருகே  விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் திருச்சி அருகே  விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் திருச்சி அருகே  விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவன் கைது
கள்ளக்காதல் விவகாரத்தால் முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய மனைவியை அடித்துக்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழைய சீவரத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மோனிகா (32). இருவரும் பெரும்புதூரில் உள்ள

மேலும்...

 முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -மு.க.ஸ்டாலின் ஆவேசம்
முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றபட்ட மு.க.ஸ்டாலின் கூறினார்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தன.இதன் பின்னர்

மேலும்...

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு; தமிழக அரசு நடவடிக்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரத்தினை துண்டித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் நேற்று

மேலும்...

 பலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது - உயர் நீதி மன்றம்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in