நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை

நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண்  கொலை
நாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிகவுண்டன்புதூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அடியில் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.

அதனருகில் இளம்பெண்ணின் கை, கால்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் உள்ளே இருந்தது. சற்று தூரத்தில் 3 ஆடுகள் கொல்லப்பட்டு கிடந்தன. இதுகுறித்த தகவலின்பேரில், நல்லிபாளையம் போலீசார் சென்று, சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர்.

அதில், 2 கால்களும், ஒரு கையும் இருந்தது. கையில் மருதாணி போட்ட அடையாளம் இருந்தது. மேலும், நெயில் பாலீசும் போடப்பட்டிருந்தது. அந்த உடல் பாகங்கள் சுமார் 25 முதல் 35 வயதுக்குள் இருக்கும் பெண்ணுடையது என்பது உறுதியானது.


கைப்பற்றப்பட்ட 2 கால்கள் மற்றும் கை ஆகியவை, உடலில் இருந்து மிகவும் துல்லியமாக, அளவு எடுத்து வெட்டியது போல் துண்டிக்கப்பட்டுள்ளது. கொலை செய்து 2 நாள் கழித்து, உடல் உறுப்புகளை தனியாக துண்டித்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து, பின்னர், எடுத்து வந்து வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மருத்துவம் படிப்பவர்கள் மற்றும் டாக்டர்களின் உதவியோடு கை, கால்களை துண்டித்து இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. போலீசாரின் கவனத்தை திசை திருப்பவே, அருகிலேயே 3 ஆடுகளை கொலை செய்து வீசி விட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குபதிந்து பெண்ணின் உடலை தேடி வருகின்றனர். பெண்ணை யாராவது கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார்களா? அல்லது அவர் நரபலி கொடுக்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
https://goo.gl/oHti5C






19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி