tamilkurinji logo
 

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்- நடிகர் கமல்ஹாசன்,We are going towards people Kamal Haasan tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

We,are,going,towards,people,Kamal,Haasan,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்- நடிகர் கமல்ஹாசன்

First Published : Monday , 22nd January 2018 08:14:33 PM
Last Updated : Monday , 22nd January 2018 08:14:33 PM


நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்- நடிகர் கமல்ஹாசன்,We are going towards people Kamal Haasan tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பின் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

இன்று கமல் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை அவர்  ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது சுற்றுப்பயண ஏற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து மற்ற மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். பிப்ரவரி 10-ந் தேதி கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காக அங்கு செல்கிறார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் கமலின் சுற்றுப்பயண விவரம் முழுமையாக அறிவிக்கப்படுகிறது.

காலை 11 மணிக்குத் துவங்கிய ஆலோசனை மதியம் 1 மணி அளவில் நிறைவு பெற்றது.

அந்த ஆலோசனையின் முடிவில், தனது அரசியல் பிரவேசத்திற்கு வலு சேர்க்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று நடிகர் கமல் முடிவு செய்துள்ளதாக, மதுரை மாவட்ட நற்பணி மன்றத் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் நடிகர் கமல்ஹாசன் அதற்கு  மறுப்பு தெரிவித்தார்.

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என  ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பின் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள்; இனி நீங்கள் நற்பணி நாயகர்கள் என கூறினார்.


பிப்., 24-ல் மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக வந்த செய்தி தவறானது. 21, 22 மற்றும் 23-ம் தேதிகளில் சுற்றுபயணம் மட்டுமே மேற்கொள்கிறேன். பொதுக்கூட்டம் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.

நற்பணி இயக்கத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய நேரம், கடமை வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்- நடிகர் கமல்ஹாசன்,We are going towards people Kamal Haasan tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்- நடிகர் கமல்ஹாசன்,We are going towards people Kamal Haasan tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்- நடிகர் கமல்ஹாசன்,We are going towards people Kamal Haasan tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
 சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசும் போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகிவிட்டது. பிரபல நடிகர்கள் என்பதால் அவர்கள் (ரஜினி, கமல்) எல்லாம் தெரிந்தவர்கள் என்று மக்கள் நம்பிவிட வேண்டாம். அவ்வாறு நினைப்பது

மேலும்...

 அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
திரை உலகில் ‘உலகநாயகன்’ எனும் அடையாளத்துடன் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்து உள்ளார். தனது கட்சியின் பெயரை வருகிற 21-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள முன்னாள்

மேலும்...

 ‘என்னையும் ஏமாற்றினார் நிரவ் மோடி’- நடிகை பிரியங்கா சோப்ரா
நிரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விளம்பரத்தில் நடத்த பணத்தை தராமல் நிரவ் மோடி ஏமாற்றிவிட்டார் என பிரியாங்கா புகார் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக

மேலும்...

 நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது வழக்குப் பதிவு
ஒரு அடார் லவ்’ மலையாளப் படப் புகழ் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் போலீஸில் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தில் வரும் ‘மணிகயா மலரயா பூவே’ பாடலில் பிரியா பிரகாஷின் முக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in