நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்

நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்
நிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி  பார்க்கலாம்.

1998-1999ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நிபா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது.


மலேசியாவில் உள்ள நிபா என்ற கிராமத்தில் இவ்வகை வைரஸ் கிருமித் தொற்றுடன் ஒருவர் கண்டறியப்பட்டதால், இந்த வைரஸுக்கு நிபா என்று பெயரிடப்பட்டது.

பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவிய நிபா வைரஸ், பன்றிகளுக்கும், பன்றிகளின் இருப்பிடத்தை சுத்தம் செய்தபோது மனிதர்களுக்கு பரவியதும் கண்டுபிடிக்கப்பட்டது.


வவ்வால்களின் உடலை இருப்பிடமாக கொண்டுள்ள நிபா வைரஸ், அதன் சிறுநீர், மலம், உமிழ் நீர் மூலமாக, நாய், பூனை, ஆடு, பன்றி, குதிரை போன்றவற்றிற்கு பரவுகிறது. பின்னர் அந்த வைரஸ், வளர்ப்புப் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

நிபா வைரஸ் தாக்கிய நபருக்கு, காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா நிலை ஏற்படும்.

பின்னர் என்செஃபாலிட்டிஸ் எனும் மூளைக்காய்ச்சல் நோயை உருவாக்கி மனிதருக்கு மரணத்தை ஏற்படுத்துகிறது. நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரில் 74.5 சதவிகிதம் பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.

நிபா வைரஸ் தாக்குதலை குணப்படுத்த மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே நோயாளியை குணப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2004-ம்  ஆண்டு வங்கதேசத்தில் ஃபரித்புர் மாவட்டத்தில் வௌவால்கள் தங்கிய பனை மரத்திலிருந்து எடுக்கப்பட்ட பதநீர் மற்றும் கள்ளை பருகிய மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.
https://goo.gl/vg8uoB






06 Feb 2019

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

31 Jan 2019

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil

01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

09 Jul 2018

வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses