tamilkurinji logo


 

நடிகர் விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு,tamil news india news

tamil,news,india,news




செய்திகள் >>> தமிழகம்

நடிகர் விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

First Published : Wednesday , 6th December 2017 01:03:58 PM
Last Updated : Wednesday , 6th December 2017 01:03:58 PM


நடிகர் விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு,tamil news india news

ஆர்.கே.நகர் தொகுதி வேட்புமனு பரிசீலனையின் போது நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரின் வேட்பு மனுக்கள் உள்பட 73 மனுக்கள் நிராகரிக்கப் பட்டன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி தலைமையில் இந்த பரிசீலனை நடந்தது.

பிற்பகல் 2.15 மணியளவில் நடிகர் விஷாலின் மனு மீதான பரிசீலனை நடைபெற்றது.

வேட்பு மனு பரிசீலனை யின்போது சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் எழுந்து, ‘விஷால் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டு இருப்பதாகவும், அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விவரத்தை குறிப்பிடவில்லை என்றும், வங்கி கணக்கு தொடர்பான விவரங் கள் சரியாக குறிப்பிடவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். எனவே, விஷால் மனுவை நிரா கரிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினர்.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி மனுவை ஆய்வு செய்து, நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

பிற்பகல் 2.30 மணியளவில் தேர்தல் அதிகாரிகள் உணவு இடைவேளைக்கு சென்றனர். அந்த நேர நிலவரப்படி, 72 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதாகவும், அதில் அ.தி.மு.க. வேட்பாளர் மது சூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின் மனுக்கள் உள்பட 42 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், விஷால் மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

உணவு இடைவேளை முடித்து, பிற்பகல் 3.30 மணியளவில் மீண்டும் மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபாவின் மனு பரிசீலனைக்கு வந்தது.

அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள், ‘ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்பு மனுவில் பிரமாண வாக்குமூலம் பிரிவில் தகவல்களை பூர்த்தி செய்யவில்லை என்றும், மனுவில் பல்வேறு பிரிவுகளில் தகவல்களை பதிவு செய்யவில்லை என்றும் அவருடைய மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அவருடைய மனுவை ஆய்வு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி, ஜெ.தீபாவின் மனுவை நிராகரித்தார்.

அதைத்தொடந்து மாலை 5.20 மணியளவில் நடிகர் விஷாலின் மனு மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவருடைய மனுவில் முன்மொழிந்ததாக கூறப்பட்ட 10 பேரில் சுமதி, தீபன், கார்த்திக்கேயன் ஆகிய 3 பேரும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு வந்தனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், ‘மனுவில் எங்கள் பெயர் போலியாக குறிப்பிடப்பட்டு, கையெழுத்து போடப்பட்டு இருக்கிறது என்றும், நாங்கள் மனம் உவந்து முன்மொழியவில்லை’ என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, போராட்டத்தை முடித்துக்கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு மீண்டும் நடிகர் விஷால் சென்று, தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், விஷால் தன்னிடம் இருந்த ஆடியோ ஆதாரங்களையும், மேலும் சில வாட்ஸ் அப் ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஷால் அறிவித்தார்.

ஆனால் நேற்று இரவு 11 மணி அளவில் விஷால் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. முன்மொழிவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

இதன்படி மொத்தம் தாக்கல் ஆன 145 மனுக்களில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.


நடிகர் விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு,tamil news india news நடிகர் விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு,tamil news india news நடிகர் விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மருத்துவ மாணவியை சுட்டுக்கொன்று போலீஸ்காரர் தற்கொலை
விழுப்புரம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரத்தை அடுத்த அன்னியூர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் சேகர்.இவரது மகள் சரஸ்வதி (22). இவர் சென்னை கே.கே நகரில் உள்ள தனியார் மருத்துவ

மேலும்...

 கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி சொத்துக்கள் முடக்கம்
மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களான பீட்டர் முகர்ஜியும், அவரது மனைவி இந்திராணி முகர்ஜியும் ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். கடந்த 2007-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்காக அன்னிய முதலீடுகள் பெற முடிவு செய்தனர்.ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பங்குகள்

மேலும்...

 சென்னையில் பயங்கரம் மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை
பூந்தமல்லி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத் தகராறில் ஆத்திரமுற்ற கணவன் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.பூந்தமல்லி சின்னமாங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி துர்கா(26). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் கூலி வேலை

மேலும்...

 தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும். சென்னையில் கோயம்பேடு,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164