tamilkurinji logo


 

நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்

First Published : Wednesday , 27th June 2018 07:50:01 PM
Last Updated : Wednesday , 27th June 2018 07:50:01 PM


நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

நடிகர் திலீப் மீண்டும் மலையாளம் திரைப்பட நடிகர்கள் அமைப்பில்(எஎம்எம்ஏ) சேர்க்கப்பட்டதை எதிர்த்து, 4 முன்னணி நடிகைகள் அமைப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மலையாள முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்புகையில் மர்மநபர்களால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அந்த நடிகை போலீஸில் அளித்த புகாரில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நடிகர் திலீப்பின் ஆலோசனையில் பெயரில் அந்த நடிகையை கடத்தியதாகத் தெரிவித்தனர்.

 இதையடுத்து, நடிகர் திலீப்பை போலீஸார் கைது செய்தனர். ஏறக்குறை. 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், மலையாள நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பது தெரிந்தவுடன், மலையாள திரைப்பட நடிகர்கள் அமைப்பான அம்மாவின் பொருளாதார இருந்த திலீப் அந்த பதவியில் இருந்தும், உறுப்பினரில் இருந்தும் நீக்கப்பட்டார்.
 
இப்போது, ஜாமினில் வெளிவந்துள்ளநிலையில், மீண்டும் அம்மா-வில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார். கொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தலைவர் மோகன்லால் தலைமையில் நடந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகர் திலீப் பங்கேற்றபோது, பல நடிகைகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தங்களின் எதிர்ப்பை வலுவாகத் தெரிவிக்கும் வகையில், கடத்தலில் பாதிக்கப்பட்ட நடிகை, ரிமா காலிங்கல், ரம்யா நம்பீஸன், கீது மோகன்தாஸ் ஆகிய 4 பேரும் தங்கள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதை திலீப்பின் முதல் மனைவி மஞ்சுவாரியர் தலைவராக இருக்கும் மலையாள சினிமா பெண்கள் கூட்டுக்குழுவின் பேஸ்புக் பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கடத்தலில் பாதிக்கப்பட்ட நடிகை பேஸ்புக்கில் கூறுகையில், கடந்த காலத்தில் அந்த நடிகர் எனக்கு திரைப்படங்கள் ஏதும் கிடைக்கவிடாமல் சதி செய்தார், அப்போது அம்மா அமைப்பை அணுகியபோது அவருக்கு எதிராக நடவடிக்கை ஏதும் இல்லை. எனக்கு பலஇக்கட்டான நிலை ஏற்பட்டபோது, அம்மா அமைப்புஅந்த நடிகரை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தியது. இனிமேல் அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் பயனில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரம்யா நம்பீஸன் கூறுகையில்,. என்னுடைய சக நடிகைகள் மிகவும் கொடுமையான சூழலைசந்திக்கும் போது, எனக்கு அம்மா அமைப்பில் இருந்து விலகுவதைத் தவிர வேறுவழியில்லை. என் சகநடிகைக்கு எதிராக அம்மா அமைப்பு மனிதநேயமில்லாத நடவடிக்கையை எடுத்ததால், நான் ராஜினாமா செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கீது மோகன்தாஸ் கூறுகையில், அம்மா அமைப்பு தன்னுடைய முடிவுகளை யாரும் கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை என்பதால், நான் எனது உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுபோன்ற செயலுக்கு நான் துணை நிற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரிமா காலிங்கல் தனது பதிவில் கூறுகையில், அடுத்து வரும் தலைமுறையினர் நலனுக்காக, அவர்களின் தொழிலில் எந்தவிதமான சமரசமும் செய்யக்கூடாது என்பதற்காக நான் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனத் தெரிவித்தள்ளார்.

மேலும் நடிகர் திலகனின் மகள் சோனியா திலகனும், அம்மா அமைப்பின் செயலையும், திலீப்பை மீண்டும் சேர்த்துக்கொண்டதையும்கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை

மேலும்...

 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதிபதியுடன் அவர் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு

மேலும்...

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலை மட்டுமே குறிவைப்பதால் கட்சி பெயரை அறிவிப்பதை தள்ளிவைத்து விட்டு காலாவை

மேலும்...

 பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை
பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in