tamilkurinji logo
 

பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்,kamal-hassan makkal needhi maiyam

kamal-hassan,makkal,needhi,maiyamபணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்

First Published : Tuesday , 10th April 2018 07:44:38 PM
Last Updated : Tuesday , 10th April 2018 07:44:38 PM


பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்,kamal-hassan makkal needhi maiyam

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்  கூறி இருப்பதாவது:-

30 ஆண்டுகளுக்கு முன்பே நான் எனது அரசியல் பயணத்தை தொடங்கி விட்டேன். எனது ரசிகர்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய போதே எனது அரசியல் பயணம் தொடங்கி விட்டது.

எனது ரசிகர் மன்றத்தை நான் தலைவரை வழிபடும் மன்றமாக வைத்திருக்கவில்லை. அதை நல்ல வி‌ஷயங்கள் செய்யும் மன்றமாக மாற்றினேன். அதற்காக நான் முதலில் மிகவும் போராட வேண்டி இருந்தது.

அப்போது மக்கள் என்னை உடனே அரசியலுக்கு வரும்படி வேண்டினார்கள். ஆனால் நான் சமுதாயப் பணி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதை பிறகு மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

ஆனால் அதை அப்போதைய அரசு விரும்பவில்லை. எங்களுடைய நற்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள்.

நாங்கள் சமுதாய பணிகள் மூலம் புகழ் பெற்று விடக்கூடாது என அப்போதைய அரசு நினைத்தது. சில சமயங்களில் எங்களது நற்பணிகளுக்கு சிறிய அளவிலேயே நாங்கள் விளம்பரம் செய்ய முடிந்தது.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ரத்த தானம் செய்தது நாங்கள்தான். 25 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் 1 லட்சம் ஜோடி கண்களை தானம் செய்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்பு தானம் செய்தோம்.

இறுதியில் உடலையே முழுமையாக தானம் செய்வதாக அறிவித்துள்ளோம்.

நாங்கள் பெற்றால்தான் பிள்ளையா? என்று ஒரு அறக்கட்டளை தொடங்கி உள்ளோம். எச்.ஐ.வி. பாதித்தவர்களின் நலனுக்காக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதில் ஏராளமான குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.

எனது ரசிகர் மன்றத்தில் சுமார் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள்தான் தெருத் தெருவாக சென்று சமுதாய பணிகளை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு தாலுகாவிலும் அவர்கள் உள்ளனர்.

தற்போது இதே மன நிலையில் உள்ளவர்களையும் எங்களது அணியில் சேர்த்து பணிகளை செய்து வருகிறோம். விவசாயம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நிபுணர்களின் கருத்துக்களை பெற்று செயல்பட தொடங்கி உள்ளோம்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலமும் வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்வதே எங்களது நோக்கமாகும்.

தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களது இலக்காகும். மற்றப்படி நான் பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் தமிழகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். நாளை நமதே என்பதே எங்களது முழக்கம். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்,kamal-hassan makkal needhi maiyam பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்,kamal-hassan makkal needhi maiyam பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்,kamal-hassan makkal needhi maiyam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா
எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய

மேலும்...

 எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்
படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும், பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் கூறியிருக்கிறார். படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும்...

 நான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்" நடிகை சர்வீன் சாவ்லா"
நான் நிர்வாணமாக நடித்தால் கூட என் கணவர் எதுவும் கூறமாட்டார் என்று பிரபல நடிகை சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.பிரபல இந்தி நடிகை சர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2   ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.இவர்

மேலும்...

 தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.நடிகை ஜீவிதா தனது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in