tamilkurinji logo
 

பள்ளி மாணவியை உயிருடன் எரித்துக்கொலை செய்த காதலன் கைது,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> தமிழகம்

பள்ளி மாணவியை உயிருடன் எரித்துக்கொலை செய்த காதலன் கைது

First Published : Monday , 13th November 2017 06:54:39 PM
Last Updated : Monday , 13th November 2017 06:54:39 PM


பள்ளி மாணவியை உயிருடன் எரித்துக்கொலை செய்த காதலன் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கோவை மாவட்டம் நெகமம் அருகே செஞ்சேரிப்புதூரை சேர்ந்தவர் கமலா (வயது 75). இவருடைய பேத்தி ஜான்சிபிரியா (17). இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் பாட்டி கமலா வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் செல்வகுமார் (22). விசைத்தறி தொழிலாளி. செல்வகுமாரும், ஜான்சிபிரியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.

இவர்களுடைய காதல் விவகாரம் தெரிந்த கமலா இருவரையும் கண்டித்ததாக தெரிகிறது. தனது பாட்டிக்கு காதல் வி‌ஷயம் தெரிந்து விட்டதால் வாழ்க்கையில் எப்படி ஒன்று சேர போகிறோம் என்று ஜான்சிபிரியா மனவேதனையுடன் காதலன் செல்வகுமாரிடம் தெரிவித்தார். மேலும் செல்வகுமாரின் குடும்பத்தினரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கமலா அருகே உள்ள ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்ய சென்று விட்டார். வீட்டில் ஜான்சிபிரியா மட்டும் தனியாக இருந்தார்.


அப்போது அங்கு வந்த காதலன் செல்வகுமார், நாம் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வோம் என்று வீட்டில் தூக்கு கயிற்றை கட்டினார். அவரிடம், தூக்குப்போட்டால் கழுத்து இறுகி செத்து விடுவது பயமாக இருக்கிறது என்று ஜான்சிபிரியா கூறி இருக்கிறார்.

இதைதொடர்ந்து மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று செல்வகுமார் கூறி உள்ளார்.


முதலில் மண்எண்ணெய்யை ஊற்றி ஜான்சி பிரியா மீது தீவைப்பது என்றும், எரியும் தீயில் இருவரும் கட்டிப்பிடித்துக்கொள்ளலாம் என்றும் செல்வகுமார் கூறியுள்ளார். இதை ஜான்சிபிரியா ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து ஜான்சிபிரியா மீது செல்வகுமார் மண்எண்ணெய் ஊற்றினார். பின்னர் தீப்பெட்டி யை பற்ற வைத்து அவர் மீது வீசினார்.


இதில் கண் இமைக்கும் நேரத்தில் ஜான்சிபிரியாவின் உடலில் தீப்பற்றி மளமளவென்று பரவி எரிந்தது. இதனால் வலியால் அலறிதுடித்தபடி அவர், காதலனை நோக்கி ஓடிவந்தார். அதைப்பார்த்து பதறிப்போன செல்வகுமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதற்கிடையே தீ உடலில் பற்றியதால் அங்கும், இங்கும் ஓடி ஜான்சிபிரியா அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

காதலியை உயிருடன் எரித்து கொன்ற செல்வகுமாரை பிடிக்க நெகமம் போலீசார் பல இடங்களில் அவரை தேடினார்கள். இந்த நிலையில், சுல்தான்பேட்டை அருகே இடையர்பாளையம் என்ற இடத்தில் பதுங்கி இருந்த செல்வகுமாரை இரவில் போலீசார் கைது செய்தனர்.


கைதான அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலியை உயிரோடு காதலன் எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பள்ளி மாணவியை உயிருடன் எரித்துக்கொலை செய்த காதலன் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பள்ளி மாணவியை உயிருடன் எரித்துக்கொலை செய்த காதலன் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பள்ளி மாணவியை உயிருடன் எரித்துக்கொலை செய்த காதலன் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனநலம் குன்றிய மகனை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை
திருவெற்றியூர்  அருகே மனநலம் குன்றிய மகனை கழுத்தறுத்து கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார். கடந்த 10-ம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்

மேலும்...

 மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று புதைத்த பள்ளி சிறுவர்கள்
சென்னையில், பள்ளி சிறுவன் ஒருவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு, பின் சுடுகாட்டில் புதைத்து இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலையில் இப்போதுதான் உண்மை தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட ராஜேஷ் என்ற 15 வயது சிறுவனை, போலீஸ் இவ்வளவு

மேலும்...

 உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து தனியார் சொகு பேருந்து நேற்று இரவு 43 பயணிகளுடன்

மேலும்...

 கழுத்தறுத்து வாலிபர் கொடூர கொலை: கால்வாயில் சடலம் வீசிய கொடுமை
திருவொற்றியூரில் கழுத்தறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டு கால்வாயில் சடலம் வீசப்பட்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை திருவொற்றியூர் ஜீவன்லால்நகர் அருகே அரசு பள்ளி பின்புறம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in