tamilkurinji logo


 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் மீண்டும் நுழைந்த நடிகை ஓவியா ,Police denied entry to see Oviya in Bigg Boss -news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Police,denied,entry,to,see,Oviya,in,Bigg,Boss,-news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்




பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் மீண்டும் நுழைந்த நடிகை ஓவியா

First Published : Saturday , 5th August 2017 09:08:03 PM
Last Updated : Saturday , 5th August 2017 09:08:03 PM


பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் மீண்டும் நுழைந்த  நடிகை ஓவியா ,Police denied entry to see Oviya in Bigg Boss -news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்பட்ட நடிகை ஓவியா மீண்டும் நுழைந்தார்.
 
ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை நடத்தினர்.

பிக்பாஸ்  நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த  திரைப்பட நடிகை ஓவியா நேற்று மாலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு பூந்தமல்லி போலீஸ் உதவி கமி‌ஷனர் ஆல்பர்ட் வில்சன், நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில்  நிகழ்ச்சியில்  இருந்து  அவராகவே வெளியேறினார் என கூறப்பட்டது. நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறிய ஓவியா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அதன் பிறகு அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சி சென்றதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

இது குறித்து பேட்டி அளித்த ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைதான், மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என  கூறி  இருந்தார்.

இந்நிலையில் வெளியேற்றப்படுபவர்கள் லிஸ்டில் ஜூலி, வையாபுரி, ஓவியா ஆகியோர் இருப்பதாலும், அவர்களில் யார் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்பது கமல் முன்னிலையில் இன்று ஷூட் செய்யப்பட இருக்கிறது. ''சில தினங்களாக ஓவியாவைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருவதால் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை பற்றி கமல் பேச இருக்கிறார்.

ஓவியாவின் உடல்நலம் பற்றியும் அவர் தெளிவுபடுத்த இருக்கிறார். அப்போது ஓவியா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால், இன்று நடைபெறும் ஷூட்டில் பங்கேற்பது அவசியம் என்பதால் நிகழ்ச்சி நிர்வாகிகள் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஓவியாவும் சம்மதிக்க தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு இருக்கிறார். உடல் நலத்தை கருத்தில்கொண்டு ஓவியா வெளியேற விரும்பினால், அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார்கள் அந்த நிகழ்ச்சியின் நிர்வாகிகள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் மீண்டும் நுழைந்த  நடிகை ஓவியா ,Police denied entry to see Oviya in Bigg Boss -news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் மீண்டும் நுழைந்த  நடிகை ஓவியா ,Police denied entry to see Oviya in Bigg Boss -news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் மீண்டும் நுழைந்த  நடிகை ஓவியா ,Police denied entry to see Oviya in Bigg Boss -news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார். இதனால் தமிழ்

மேலும்...

 கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின்

மேலும்...

 பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்
புரோமோவில் காட்டப்பட்டது போல் மஹத்துக்கும் பாலாஜிக்குமான சண்டை நேற்றைய நிகழ்ச்சியில் வெடித்தது.வீட்டில் உள்ளவர்கள் மூன்று அணிகளாக பிரிந்து ஆடிய ‘கிருடன்- போலீஸ்’ டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. மற்ற டாஸ்க்கை போல இல்லாமல் இதில் மோதல்கள் அதிகமாகவே ஏற்பட்டன. உணவு கூட ஒரு

மேலும்...

 சர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு
பாபா’, ‘சர்கார்’  உள்ளிட்ட தமிழ் திரைப்பட பிரச்சனைகள் குறித்து அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்கத் தயார் என நடிகர் சிம்பு இன்று தெரிவித்துள்ளார்.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்  வெளியானது. இதில் விஜய் புகைபிடிப்பது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in