பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் அந்த மனுவில், புகாருக்கு உள்ளான ஐஜி முருகனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பாலியல் புகாரை விசாரிக்கும் விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் எனவும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் தெய்துள்ளார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்பியாக உள்ள ஒரு பெண் அதிகாரியை அதே துறையில் பணியாற்றும் ஐஜி ஒருவர் அடிக்கடி தனது அறைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி முடித்ததும், ஆபாசமாக பேசி வந்துள்ளார்.

பின்னர் அதிகாரி எழுந்து செல்லும்போது பின்னால் இருந்து செல்போனில் படம் எடுத்து வந்துள்ளார். கேட்டால், நீங்கள் அழகாக சேலை கட்டியுள்ளீர்கள். அதை என் மனைவிக்கும் எடுத்து கொடுக்கப் போகிறேன் என்று இரட்டை அர்த்த வசனங்களில் பேசி வந்துள்ளார்.

இது குறித்து பல முறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. அதன் பின்னர் ஐஜியிடம் பெண் எஸ்பி நேரடியாகவே எச்சரித்துள்ளார். தன்னுடைய அதிகாரத்துக்கு பெண் எஸ்பி பயப்படாததால், அவரை மிரட்டத் தொடங்கியுள்ளார். எஸ்பியின் ஆண்டு அறிக்கையில் அவரைப் பற்றிய மதிப்பீட்டை குறைப்பதாகவும் மிரட்டியுள்ளார்.

கடந்த மாதம் 1ம் தேதி தனது அறைக்கு அழைத்த ஐஜி, பெண் எஸ்பி வந்ததும், கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அவரை தள்ளிவிட்டு வெளியில் ஓடி வந்த எஸ்பி, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மற்றும் டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் ஓய்வுபெற்ற எஸ்பி சரஸ்வதி அடங்கிய குழுவை அமைத்து  டிஜிபி உத்தரவிட்டார். ஆனால் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் பெண் எஸ்.பி., குறிப்பிட்டுள்ளார்.
https://goo.gl/9TtqCX






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது