tamilkurinji logo
 

பெங்களூருவில் பிரபல கன்னட நடிகர் காசிநாத் மரணம்,Kashinath: Kannada film actor Kashinath passes away tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Kashinath:,Kannada,film,actor,Kashinath,passes,away,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,newsபெங்களூருவில் பிரபல கன்னட நடிகர் காசிநாத் மரணம்

First Published : Friday , 19th January 2018 07:30:18 PM
Last Updated : Friday , 19th January 2018 07:30:18 PM


பெங்களூருவில் பிரபல கன்னட நடிகர் காசிநாத் மரணம்,Kashinath: Kannada film actor Kashinath passes away tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பெங்களூருவில் பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.


பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் (வயது 67). இவர் சுமார் 43 கன்னட திரைப்படங்களில் நடிகராகநடித்துள்ளார். பல்வேறு படங்களையும் தயாரித்து இருக்கிறார்.

இவர் பெங்களூரு ஜெயநகரில் வசித்து வந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து அவர் நேற்று காலை 8 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்
நடிகர் காசிநாத் மறைவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக காசிநாத்தின் உடல் பசவனகுடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

நடிகர்கள் உபேந்திரா, சிவராஜ்குமார், தர்ஷன், யஷ், நடிகைகள் உமாஸ்ரீ, அபிநயா உள்பட கன்னட திரையுலகினர் ஏராளமானவர்கள் நேரில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்று மாலையில் அவரது உடல் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

காசிநாத் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கன்னட திரைத்துறையில் தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.

2 படங்களுக்கு வசனமும் எழுதினார். கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படத்திற்கு இசை அமைத்தார். பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

மேலும் இவர் நடிகர்கள் உபேந்திரா, குமார் கோவிந்த், இசை அமைப்பாளர் மனோகர், இயக்குனர் சுனில்குமார் ஆகியோரை கன்னட திரையுலகில் அறிமுகம் செய்தவர்.

நடிகைகள் உமாஸ்ரீ, அபிநயா ஆகியோரை அறிமுகம் செய்து தனது திரைப்படங்களில் அதிகமான வாய்ப்புகளை வழங்கியவர். 1980-ம் ஆண்டுகளில் ‘அமர மதுர பிரேம‘ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான காசிநாத், சமூக அக்கறை உள்ள படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.

பெங்களூருவில் பிரபல கன்னட நடிகர் காசிநாத் மரணம்,Kashinath: Kannada film actor Kashinath passes away tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பெங்களூருவில் பிரபல கன்னட நடிகர் காசிநாத் மரணம்,Kashinath: Kannada film actor Kashinath passes away tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பெங்களூருவில் பிரபல கன்னட நடிகர் காசிநாத் மரணம்,Kashinath: Kannada film actor Kashinath passes away tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்" நடிகை சர்வீன் சாவ்லா"
நான் நிர்வாணமாக நடித்தால் கூட என் கணவர் எதுவும் கூறமாட்டார் என்று பிரபல நடிகை சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.பிரபல இந்தி நடிகை சர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2   ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.இவர்

மேலும்...

 தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.நடிகை ஜீவிதா தனது

மேலும்...

 சிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி
காஷ்மீிர் மாநிலத்தில் சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டைதை நினைக்கும்போது மனதிற்கு கஷ்டமாக உள்ளது என நடிகர் விஜய் சேதுபதி தெவித்துள்ளார். இவங்களுக்கு துணை போகுவர்களை நினைக்கும்போது கோவம் அதிகமாக வருகிறது. பெண்களை மதிப்பதற்கு கற்று கொடுத்துள்ளோம் அதைபோல்

மேலும்...

 காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in