போராட்டமே கூடாது என்று ரஜினி சொல்லவில்லை: பா.ரஞ்சித்

போராட்டமே கூடாது என்று ரஜினி சொல்லவில்லை: பா.ரஞ்சித்
போராட்டமே கூடாது என்று ரஜினிகாந்த் சொல்லவில்லை" என்று இயக்குநர் பா.இரஞ்சித் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின மக்கள்மீது மாற்று சாதியினர் தாக்குதல் நடத்தியதில் மூவர் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த 5 பேர், மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.


கொல்லப்பட்டவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசு பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். கொலை செய்யப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இல்லையென்றால் உடல்களை வாங்க மாட்டோமென்று மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே தேவேந்திரர் அமைப்புகளுடன் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று நடந்த போராட்டத்தில் ஜான்பாண்டியன், இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துகொண்டனர்.


அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், "கச்சநத்தம் மக்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை, பிற சமூகத்தினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தென் மாவட்டங்களில் கலவரம் ஏற்பட இந்தச் சம்பவம் காரணமாகிவிடும். சாதி வெறியுடன் தாக்குதல் நடத்தியவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.


இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையான நிதியை அரசு வழங்க வேண்டும்.


`எதுக்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்று ரஜினி சொல்லியிருக்கிறாரே’ இது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த இரஞ்சித், இது அவருடைய கருத்து. இப்போது நான் போராட்டத்தில்தான் இருக்கிறேன்.


போராட்டத்தால்தான் இங்குள்ள பிரச்னைகளைத் தீர்க்க முடியும். ரஜினி சார் போராட்டமே கூடாது எனச் சொல்லவில்லை. காலையில் அவரிடம் நான் பேசினேன். அப்போது, `போராட்டமே வேண்டாமென்று நான் சொல்லவில்லை.

போராட்டம் நடக்கும்போது இப்படிப்பட்ட வன்முறை நடக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது’ என்ற வருத்தத்தை என்னிடம் தெரிவித்தார். போராட்டமே கூடாது என்றால் நான் அங்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

ஒவ்வொரு உரிமையும் போராடித்தான் பெற முடியும். அப்படி போராட வேண்டிய சூழ்நிலை வந்ததால்தான் நான் தற்போது களத்துக்கு வந்துள்ளேன்" என்றார்.
https://goo.gl/X3jAAq


18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்