மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்

மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்
எம்எல்ஏ தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே உதவி செய்ததாகவும் போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

அசாமின் அலகாபூர் தொகுதி எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்ரி. இவர் மீது கடந்த 6ம் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். அதில், கடந்த மே 19, 23ம் தேதிகளில் சவுத்ரி தன்னை பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே அவருக்கு உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், தன்னை கவுகாத்திக்கு கடத்தி செல்வதற்கு முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதால் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், தன் கணவர் தன்னை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காமல் பூட்டி வைத்து இருந்ததால் முன்கூட்டியே போலீசில் புகார் தெரிவிக்க இயலவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து, அவரது கணவரை கவுகாத்தியில் உள்ள அசாராவில் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தன் மீதான புகாரை எம்எல்ஏ சவுத்ரி மறுத்துள்ளார். இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது என்றும் தனக்கெதிரான சதி திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://goo.gl/VmGF9G


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை