tamilkurinji logo


 

மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்,Menopause: Symptoms, causes, and treatments Menopause: What is Menopause? Menopause Symptoms, Treatment mathavidai details in tamil mathavidai vara vaithiyam

Menopause:,Symptoms,,causes,,and,treatments,Menopause:,What,is,Menopause?,Menopause,Symptoms,,Treatment,mathavidai,details,in,tamil,mathavidai,vara,vaithiyam




மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்

First Published : Tuesday , 20th February 2018 08:10:41 PM
Last Updated : Tuesday , 20th February 2018 08:17:03 PM


மாதவிடாய்  (மெனோபாஸ்) சமையத்தில்   பெண்களுக்கான சில டிப்ஸ்,Menopause: Symptoms, causes, and treatments Menopause: What is Menopause? Menopause Symptoms, Treatment mathavidai details in tamil mathavidai vara vaithiyam

உங்கள் மாதவிலக்கிற்கும் எடைக்கும் சம்பந்தம் உள்ளது. அதிக எடை முறையான மாதவிலக்கினை பாதிக்கும். ஆரோக்கியமான நார்சத்து மிகுந்த உணவினை உட்கொள்ளுங்கள். இது எடையை சீராய் வைக்கும். மலச்சிக்கலை நீக்கும். மாதவிலக்கு வலியின்றி இருக்கும்.

உங்கள் இடுப்பு பகுதி உறுதியாய் இருக்க உடற்பயிற்சி அவசியம்.

30 வயதிற்குள் குழந்தை பெறுவது ஆரோக்கியமானது.

பிறப்புறுப்புகளை கடின, கார சோப் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள்.

மாதவிடாய் நிற்கும் காலத்தில் பல பெண்கள் சில பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். இவர்களை இக்கால கட்டத்தில் தாவர உணவினை எடுத்துக் கொள்ளவும், சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றது.

 மாதவிலக்கு காலத்தில் வயிற்றை இழுத்து பிடித்து வலி, கால் வலி இவற்றினை அனுபவிப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று ஒமேகா, கால்ஷியம் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.

மாதவிலக்கு முறையற்று இருந்தால் முதலில் எடையினை கவனியுங்கள். அதிக மனஉளைச்சல் கூட காரணம் ஆகலாம். தைராய்டு பிரச்சனை இருக்கின்றதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உடற்பயிற்சியினை அன்றாடம் செய்யுங்கள்.

சிலருக்கு மாதவிலக்கு சுற்றின் நடுவில் சிறு சிறு ரத்த திட்டுகள் ஏற்படலாம். பாலிப்ஸ் எனப்படும் கருப்பை வாய் இவற்றில் ஏற்படும் சதையின் அதிக வளர்ச்சி காரணமாக இருக்கலாம். மருத்துவர் இதனை பரிசோதித்து நீக்கி விடுவார்.

 சிலருக்கு மாதவிலக்கிற்கு ஓரிரு நாட்கள் முன்பு ஒருவித மனசோர்வு, பயம், எரிச்சல், சக்தி இன்மை, அதிகம் எதனையாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படலாம். அதிக பழங்கள், காய்கறிகள், நார்சத்து கூடிய உணவு இவை தீர்வு கொடுக்கும். அசைவ உணவினை தவிர்ப்பது நல்லது. முடியவில்லை என்றால் மிகவும் குறைத்து கொள்ளலாம்.

ஒரு பெண்ணுக்கு 40-55 வயதிற்குள் மாதவிடாய் நிற்கலாம். இது அவரது தாய், பரம்பரை மற்றும் வேறு சில காரணங்களைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம்.

வயிற்றினைச் சுற்றி எடை கூடுதல்

பிறப்புறுப்பு வறட்சி ஆகலாம்.

சிறுநீர் பாதை, சிறுநீர் பையில் கிருமி தாக்குதல்

 கவனக்குறைவு ஆகியவை ஏற்படலாம்.

இக்கால கட்டத்தில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி இதனை தவிர்ப்பதில் முக்கிய பங்கு பெறுகின்றது..

பதட்டம் பல விதங்களில் ஒருவரிடம் வெளிப்படும். கை, கால் நடுங்கும். சிலருக்கு நெஞ்சு பிடிப்பு போல இருக்கும் என பலவற்றினை கூறலாம்.

 பதட்டம் என்பது ஒருவகை பயம். நிம்மதி இன்மை, ஏதோ இல்லாத ஒன்று இருப்பதாக நடந்து விடப்போவதாக நினைக்கும் பயம்.


ஆனால் இந்த பதட்டம் மனிதனை மிகவும் பாதிக்கின்றது என்பதால் இதிலிருந்து வெளிவருவதனை செயல்படுத்த வேண்டும்.

பலருக்கு எப்பொழுதும் ஒரு பீதி இருக்கும். தான் வேலை செய்யும் இடத்தில், பலர் இருக்கும் கூட்டத்தில் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற தேவையில்லாத பீதி இருக்கும். அதிகம் வியர்க்கும், நெஞ்சு படபடக்கும்.

சிலருக்கு இரவில் தூக்கமே வராது. அதிக சோர்வு இருக்கும். ஆனால் தூக்கம் வராது. இதற்கு காரணம் மனஉளைச்சலால், மூளை இரவில் ஓய்வு எடுப்பதில்லை.

சிலருக்கு அன்றாட சாதாரண வேலைகள் செய்வதே மூச்சு வாங்கும்.

 ஏதோ எல்லாமே சரியாக நடக்காதது போல் இருப்பர்.
 வயிற்று பிரட்டல், வாந்தி அடிக்கடி இருக்கும்.
 உடல் வலி இருந்து கொண்டே இருக்கும்.


இத்தகு பிரச்சினைகளிலிருந்து அவசியம் வெளிவர வேண்டும். முதலில் இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கின்றதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையினை எடுத்துக் கொள்ள வேண்டும்.


உடற்பயிற்சி சதைகளை வலுவாக்கும். எலும்புகளை உறுதியாக்கும். இவை தெரிந்ததே. உடற்பயிற்சியின் பொழுது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாக இப்பொழுது கூறப்படுகின்றது.

 உறுதியாக கூற மேலும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதால் அதனை இங்கு விவரித்துக் கூறவில்லை.

அவ்வப்போது ‘உண்ணா விரதம்’ இருப்பதால் மூளையிலுள்ள திசுக்களில் சேரும் நச்சுக்கள் சுத்தமடைவதாகவும் கூறப்படுகின்றது.

 யோகாவும், தியானமும் ‘பதட்டம்’ குறைய மிகச் சிறந்த வழிகளாகும்.

மாதவிடாய்  (மெனோபாஸ்) சமையத்தில்   பெண்களுக்கான சில டிப்ஸ்,Menopause: Symptoms, causes, and treatments Menopause: What is Menopause? Menopause Symptoms, Treatment mathavidai details in tamil mathavidai vara vaithiyam மாதவிடாய்  (மெனோபாஸ்) சமையத்தில்   பெண்களுக்கான சில டிப்ஸ்,Menopause: Symptoms, causes, and treatments Menopause: What is Menopause? Menopause Symptoms, Treatment mathavidai details in tamil mathavidai vara vaithiyam மாதவிடாய்  (மெனோபாஸ்) சமையத்தில்   பெண்களுக்கான சில டிப்ஸ்,Menopause: Symptoms, causes, and treatments Menopause: What is Menopause? Menopause Symptoms, Treatment mathavidai details in tamil mathavidai vara vaithiyam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses
சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி,  வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக

மேலும்...

 காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடிக்கிறோம். அதற்கு பதிலாக ஒரு கப் சுடுதண்ணீருடன் அன்றைய நாளைத் துவங்கினால் மிக சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.தினமும் அதிகாலையில் சுடுதண்ணீர் குடிப்பதால் உடலிலும் சருமத்திலும் ஆரோக்கியமான மாற்றங்கள் நிறைய உண்டாகின்றன. இரவு உணவை எப்போதும்

மேலும்...

 பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்
நம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. மரபணு மற்றம், பல ஊசிகள் மூலம் கொழுப்பு சத்து நிறைந்தது தான் பிராய்லர் கோழி.பிராய்லர் கோழி வளர்க்க 12

மேலும்...

 சர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies
100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 10  நாள் வெயிலில் வைத்து   நன்றாக சாரு எண்ணெயில் இறங்கியதும் பிறகு ஒரு   துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in