tamilkurinji logo
 

மஞ்சுவாரியாரின் சதியால் குற்றச்சாட்டுக்கு ஆளானேன் - நடிகர் திலீப் ,Malayalam actress abduction case: Kerala HC to take up bail plea of .news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Malayalam,actress,abduction,case:,Kerala,HC,to,take,up,bail,plea,of,.news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


மஞ்சுவாரியாரின் சதியால் குற்றச்சாட்டுக்கு ஆளானேன் - நடிகர் திலீப்

First Published : Saturday , 12th August 2017 07:51:28 PM
Last Updated : Saturday , 12th August 2017 07:51:28 PM


மஞ்சுவாரியாரின் சதியால் குற்றச்சாட்டுக்கு ஆளானேன் - நடிகர்  திலீப் ,Malayalam actress abduction case: Kerala HC to take up bail plea of .news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

கேரளாவில் பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். இதையடுத்து திலீப், கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் திலீப் மீண்டும் ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு, தனது தரப்பு நியாயங்களை சரியாக கூறாததே காரணம் என்று கருதிய திலீப், தனக்காக இதுவரை ஆஜரான வக்கீலை மாற்ற முடிவு செய்தார்.

அதன்படி, திலீப் சார்பில் ஐகோர்ட்டில் ஆஜராக பிரபல வக்கீல் ராமன்பிள்ளை ஏற்பாடு செய்யப்பட்டார். அவர், திலீப்புக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்தார்.அதில், தனக்கு ஜாமீன் வழங்க கேட்டு பல்வேறு தகவல்களை திலீப் கூறி உள்ளார். அந்த மனுவில் உள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:-

நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கூறி உள்ளனர். பல்சர் சுனிலை நான் பார்த்ததே இல்லை. ஒருபோதும் அவரை சந்தித்ததும் கிடையாது. ஆனால் போலீசார் வேண்டுமென்றே அவரை எனக்கு தெரியும் என்று கூறி உள்ளனர்.

இதற்கு என் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சுவாரியாரின் சதி உள்ளது.

நடிகை கடத்தப்பட்ட சம்பவத்திற்கு மறுநாள், மலையாள நடிகர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற மஞ்சுவாரியார், என்னை இந்த குற்றச்சாட்டில் இழுத்து விடும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்.

இதுபற்றி நான், போலீசாரிடம் கூறி உள்ளேன். ஏ.டி.ஜி.பி. சந்தியா என்னிடம் விசாரித்தபோது, மஞ்சுவாரியார் பற்றியும், அவரது நெருங்கிய நண்பர் ஸ்ரீகுமார்மேனன் ஆகியோர் பற்றியும் சில முக்கிய தகவல்களை தெரிவித்தேன். மஞ்சுவாரியாருக்கும், ஸ்ரீகுமார் மேனனுக்குமான தொடர்பு பற்றி கூறியபோது, ஏ.டி.ஜி.பி. சந்தியா அங்கிருந்த காமிராக்களை அணைத்து விட்டார்.

இந்த சதியில் என்னை வேண்டுமென்றே சிக்க வைக்க முயற்சி நடந்தது. அதில், நான் மாட்டிக் கொண்டேன்.

இவ்வாறு அந்த புதிய ஜாமீன் மனுவில் திலீப் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


மஞ்சுவாரியாரின் சதியால் குற்றச்சாட்டுக்கு ஆளானேன் - நடிகர்  திலீப் ,Malayalam actress abduction case: Kerala HC to take up bail plea of .news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மஞ்சுவாரியாரின் சதியால் குற்றச்சாட்டுக்கு ஆளானேன் - நடிகர்  திலீப் ,Malayalam actress abduction case: Kerala HC to take up bail plea of .news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மஞ்சுவாரியாரின் சதியால் குற்றச்சாட்டுக்கு ஆளானேன் - நடிகர்  திலீப் ,Malayalam actress abduction case: Kerala HC to take up bail plea of .news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் பிரகாஷ்ராஜ்
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில்

மேலும்...

 தமிழன் தலையில் ”கோமாளிக்குல்லா”: நடிகர் கமல்ஹாசன்
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், ஊழல் குறித்தும் அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், பிளவு பட்ட அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கமல்ஹாசன்  டுவிட்டரில் கூறியிருப்பதவது:-

மேலும்...

 துப்பட்டாவில் தேசியக் கொடி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா
தேசியக்கொடி வடிவிலான துப்பட்டாவை பிரியங்கா சோப்ரா அணிந்தபடி போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சுதந்திர தினவிழாவின்போது பிரியங்கா சோப்ரா ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கழுத்தில் தேசியக்கொடியின் மூவர்ணங்களால் ஆன துப்பட்டாவை அணிந்திருந்தார். அந்தப்

மேலும்...

 என் காதல் உண்மையானது மனம் திறந்த நடிகை ஓவியா
நான் மன அழுத்தத்தோடு இல்லை... ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். உண்மைக்காதல் என்றுமே தோற்காது என்று கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்த ஓவியாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறினார் ஓவியா.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in