மும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்

மும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கி மக்கள் அவதியடைந்துள்ளனர்.

ஒரு வாரமாக இதே நிலை நீடித்து வருவதால் அத்தியாவசிய சேவைகளும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான டப்பாவாலாக்கள் இன்று தங்களது வேலையை நிறுத்தி வைத்துள்ளனர்.

ரெயில் நிலையங்களை சூழ்ந்துள்ள மழை நீர் விரைவில் அகற்றப்படும் எனவும், படிப்படியாக ரெயில் சேவை சீரடையும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கனமழையால் வெளிச்சம் மிக குறைவாகவே இருப்பதால், மழைநீர் தேங்காத சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கிரேட்டர் மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் ஜூலை 10 முதல் 13 வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் இருந்து மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

https://goo.gl/cvWER7






27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்