tamilkurinji logo
 

மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்,Highlights, IPL 2018, MI vs DD at Mumbai, Full cricket score: Delhi Daredevils win by seven wicketstamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Highlights,,IPL,2018,,MI,vs,DD,at,Mumbai,,Full,cricket,score:,Delhi,Daredevils,win,by,seven,wicketstamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,



செய்திகள் >>> இந்தியா

மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

First Published : Saturday , 14th April 2018 09:16:22 PM
Last Updated : Saturday , 14th April 2018 09:16:22 PM


மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்,Highlights, IPL 2018, MI vs DD at Mumbai, Full cricket score: Delhi Daredevils win by seven wicketstamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றுவரும்  9-வது லீக் ஆட்டத்தில்  டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கௌதம் கம்பீா் மும்பை அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.


இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நடப்பு சாம்பியனாக இருந்த போதிலும், கடந்த 2 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது, அந்த அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய இந்த  போட்டியில், மும்பை அணியின் இன்னிங்சை எவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ் இருவரும் துவக்கினர். முதல் ஓவரிலேயே  15 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை இந்த ஜோடி துவக்கியது.

இவா்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம மும்பை அணி 50 ரன்களை 4 ஓவா்களிலேயே  தொட்டது. பின்னா் வந்த முகமது ஷமி பந்தையும் மைதானத்தின் நாலபுறமும் இந்த ஜோடி சிதறடித்தது.


இதனால் 5 ஓவா்கள் முடிவில் 66 ரன்கள் எடுத்து விக்கெட்டு இழக்காமல் மும்பை அணி விளையாடி வந்ததது. அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டியது.

அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 53(32 பந்து,7 பவுண்டரி,1 சிக்சா்)  ராகுல் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னா் கேப்டன் ரோஹித் சர்மா களம் கண்டார்.  இஷான் கிஷான் 44(23 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சா்) ரன்களில் ஆட்டமிழந்தார். 


மளமளவென ரன்களை சேர்த்து அரைசதத்தை நெருங்க  டேனியல் கிறிஸ்டியன் பந்தில் போல்டு ஆனார் இஷான் கிஷான்.  பின்னா் களமிரங்கிய அதிரடி ஆட்டகாரரான பொல்லார்டும்  கிறிஸ்டியன் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ட்ரெண்ட் பவுல்ட் பந்தில் கேப்டன் ரோஹித் சர்மா (18 ரன்கள்) கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதனை தொடா்ந்து நட்சத்திர ஆட்டகாரா் ஹார்டிக் பாண்டியாவுடன் கிருனல் பாண்டியா இணைந்தார். இருவரும் கடைசி தருவாயில் தடுமாறி அவுட்டாக,  மும்பை அணியின் ரன்வேகத்தில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது.

 மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில்  7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை சேர்த்தது.  

பின்னா் 195 ரன்களை எடுத்தால் தான் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இறங்கிய டெல்லி அணி சிறப்பான துவக்கம் பெற்றது.


 தொடக்கத்தில் இருந்தே ஜேசன் ராய், கேப்டன் கவுதம் கம்பீா் ஆகிய ஜோடிகள் தன்னுடைய நிதானமான ஆட்டத்தின் வெளிப்படுத்தியதன் மூலம் 5 ஓவா்களில் 50 ரன்களை எடுத்து விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடினா்.


பின்னா் கேப்டன் கவுதம் கம்பீா்15 (16 பந்துகள்) ரஹ்மான் எறிந்த பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேற ராயுடன் ரிஷாப் பன்ட் ஜோடி சோ்ந்தார்.


பின்னா் இருவரும் இணைந்து அணியின் வெற்றிக்காக நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி 10 ஓவா்கள் முடிவில் 104 ரன்களை குவித்தனா்.


இதன் மூலம் ஜேசன் ராய் அரைசதத்தை அடித்து ரசிகா்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தினா். ரிஷாப் பன்ட்  47(25 பந்துகள்) ரன்கள் எடுத்து  கிருனல் பாண்டியா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். பின்னா் வந்த அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 13 ரன்களில் ஏமாற்றினார்.

விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஒருபுறம் ஜேசன் ராய்91(53 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சா்) தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி கொண்டே  மும்பை அணியின் பந்துகளை தும்சம் செய்தார் .

பின்னா் ஷிரியாஸ் ஐயர் 27(20 பந்து,3 பவுண்டரி, 1 சிக்சா்) அவருடன் கைகோர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனா்.  20 ஓவரின்  கடைசி பந்தில் 195 ரன்களை அடுத்து 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வென்ற டெல்லி அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்,Highlights, IPL 2018, MI vs DD at Mumbai, Full cricket score: Delhi Daredevils win by seven wicketstamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்,Highlights, IPL 2018, MI vs DD at Mumbai, Full cricket score: Delhi Daredevils win by seven wicketstamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்,Highlights, IPL 2018, MI vs DD at Mumbai, Full cricket score: Delhi Daredevils win by seven wicketstamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை
புனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு

மேலும்...

 பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்
பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in