tamilkurinji logo


 

ரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில் திருமணம்,Ranveer-Singh-and-Deepika-Padukonetamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Ranveer-Singh-and-Deepika-Padukonetamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,
ரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில் திருமணம்

First Published : Tuesday , 3rd July 2018 12:23:02 PM
Last Updated : Tuesday , 3rd July 2018 12:23:02 PM


ரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில்  திருமணம்,Ranveer-Singh-and-Deepika-Padukonetamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகன், நாயகியாக வலம் வரும் ரன்வீர்சிங் - தீபிகா படுகோனே திருமணம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழில் ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியா ‘பத்மாவத்’ படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக எதிர்ப்புகளையும், கொலை மிரட்டல்களையும் சந்தித்தார்.

இதே படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் திருமண ஏற்பாடுகள் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரன்வீர்சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா தூதுவராக இருக்கிறார். எனவே அங்குள்ள அரசாங்கம் அந்த நாட்டுக்கு வந்து திருமணம் செய்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால் தீபிகா படுகோனேவுக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை. இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.

நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இத்தாலியில்தான் திருமணம் நடந்தது. இத்தாலி அரசும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்திருக்கிறது.

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் எப்போது நடக்கும் என்று பாலிவுட்டில் ஒரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் இருவருக்கும் வருகிற நவம்பர் 19-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரன்வீர்சிங் கூறும்போது ‘எனது திருமணம் இந்த வருடம் நடக்கும்’ என்றார்.


ரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில்  திருமணம்,Ranveer-Singh-and-Deepika-Padukonetamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில்  திருமணம்,Ranveer-Singh-and-Deepika-Padukonetamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில்  திருமணம்,Ranveer-Singh-and-Deepika-Padukonetamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி
'சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான

மேலும்...

 இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி

மேலும்...

 அரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரிக்க வேண்டும்: கமல்ஹாசன்
சுயசக்தி விருதுகள் என்ற பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமல்ஹாசன் விருதுகளை வழங்கினார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in