tamilkurinji logo
 

ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா ,Bharathiraja-says-Rajini tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Bharathiraja-says-Rajini,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா

First Published : Monday , 16th April 2018 07:31:59 PM
Last Updated : Monday , 16th April 2018 07:31:59 PM


ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா ,Bharathiraja-says-Rajini tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

காவிரி மேலாண்மை அமைக்க கோரி பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.


இதற்கு நடிகர் ரஜினிகாந்த், ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து’ என்று கூறினார்.

இதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை அறவழியில் போராட்டம் நடத்தியது. ஆனால், நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம்மீது கத்தி வைத்துப் பதம் பார்க்க நினைக்கும், ரஜினி அவர்களின் சமீபத்திய டுவிட்டர் பேச்சு.

அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் சேர்ந்து விட்டார்கள், என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும், பேச்சு இது! தங்களுடைய திரைப்படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும், உங்களைப் போன்ற ஒரு நடிகனைத் தமிழ்த்திரை உலகம் இதுவரை சந்தித்ததே இல்லை...

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த போது, குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடுனீர்களா? இல்லை, ஓர் அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?


எதற்கும் வாய் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம் ‘இதை ஆரம்பத்திலே கிள்ளியெறிய வேண்டும் என்கிறீர்களே’. ஓ! இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது, நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடக்காவியின் தூதுவர் என்று!

தமிழ்நாட்டிலேயே இருந்துக் கொண்டு, தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில், ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு, எங்களையே வன்முறையாளர்கள் என்று சுமத்துகிறீர்கள்.

சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன் தான். எங்கோ, கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன், அல்லது, இந்த நிகழ்ச்சியைக் கறைப்படுத்த நினைத்த ஒருவன், செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம்...

பேசும் போது, எதைப்பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள்...

இல்லையென்றால், என் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர்கள், அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை என்பதையும் நீங்கள் நன்கு உணர்வீர்கள், என்பதையும் உங்களுக்கு சொல்லிக் கொள்ள நினைக்கிறேன்’ இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா ,Bharathiraja-says-Rajini tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா ,Bharathiraja-says-Rajini tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா ,Bharathiraja-says-Rajini tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-2019 மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். 2019 மார்ச் 14 முதல் மார்ச் 29

மேலும்...

 நீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்
நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க அரசு தவறி விட்டதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கு விசாரனையில் கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், நீட்

மேலும்...

 சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைவது உறுதி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
சட்டசபையில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, பாலங்கள் துறை மீதான மானியக்கோரிக்கையில் தி.மு.க. உறுப்பினர் பெரியசாமி பேசினார். அவரது பேச்சின் இடையே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை-சேலம் இடையே பசுமைவழி விரைவு சாலை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,

மேலும்...

 ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், 21 மாதமாக நிலுவையில் உள்ள

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in