ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’: அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ்

ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’: அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ்
ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம், அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்பு, சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.


இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு, எந்த இடைவெளியும் இன்றி கடந்த 25-ம் தேதி வரை ஒரே ஷெட்யூலாக நடைபெற்றது.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்தப் படம், அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 18-ம் தேதி ஜோதிகாவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/fYUhnL






02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்