tamilkurinji logo
 

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை : சட்ட சபையில் மசோதா நிறைவேற்றம்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Madhya Pradesh legislative assembly unanimously passes legislation ...

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news Madhya,Pradesh,legislative,assembly,unanimously,passes,legislation,...



செய்திகள் >>> தமிழகம்

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை : சட்ட சபையில் மசோதா நிறைவேற்றம்

First Published : Monday , 4th December 2017 06:43:05 PM
Last Updated : Monday , 4th December 2017 06:43:05 PM


சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை : சட்ட சபையில் மசோதா நிறைவேற்றம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Madhya Pradesh legislative assembly unanimously passes legislation ...

நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர்.  தனியாக செல்லும் சிறுமிகள் மற்றும் பெண்கள குறிவைத்து இதுபோன்ற வன்முறைகள் அதிகமாக நடந்து வருகின்றன.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கும் குற்றவாளிகள் சிறிது காலத்தில் வெளியே வந்துவிடுகின்றனர்.

இதையடுத்து, பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து 12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா மத்திய பிரதேச சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது.  இது தொடர்பான சட்ட மசோதாவிற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்ததால், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமசோதா மத்திய சட்டத்துறை அமைச்ச்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பின் இந்த சட்ட திருத்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 


பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ம.பி. அரசின் இந்த சட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.


சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை : சட்ட சபையில் மசோதா நிறைவேற்றம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Madhya Pradesh legislative assembly unanimously passes legislation ...
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை : சட்ட சபையில் மசோதா நிறைவேற்றம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Madhya Pradesh legislative assembly unanimously passes legislation ...
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை : சட்ட சபையில் மசோதா நிறைவேற்றம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Madhya Pradesh legislative assembly unanimously passes legislation ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னையில் இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை
சென்னையின் இரண்டு வெவ்வேறு இடங்களில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சென்னை பாதுகாப்பற்ற நகரமாகி வருகிறதா என்ற கேள்வி அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன.

மேலும்...

 ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால், போலீஸாரின் துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 144 தடை உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி

மேலும்...

 தமிழக வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை - ஸ்டாலின்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும்,

மேலும்...

 நிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in