tamilkurinji logo
 

சென்னையில் ஞாயிறு இரவு முதல் களத்தில் இறங்கி மழை விளையாடும்: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு, Tamil Nadu Weatherman TamilNadu Weatherman on Twitter:tamilnadu weatherman report

Tamil,Nadu,Weatherman,,TamilNadu,Weatherman,on,Twitter:tamilnadu,weatherman,report


செய்திகள் >>> தமிழகம்

சென்னையில் ஞாயிறு இரவு முதல் களத்தில் இறங்கி மழை விளையாடும்: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

First Published : Thursday , 9th November 2017 07:21:52 PM
Last Updated : Thursday , 9th November 2017 07:21:52 PM


சென்னையில் ஞாயிறு இரவு முதல் களத்தில் இறங்கி மழை விளையாடும்: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு,
Tamil Nadu Weatherman  TamilNadu Weatherman on Twitter:tamilnadu weatherman report


சென்னையில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்க உள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி வரும் சாத்தியக்கூறுகளே அதிகம் இருப்பதால் வரும் ஞாயிறு முதல் மீண்டும் மழை தொடங்கும்.  4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மழை குறித்து  தமிழ்நாடு வெதர்மேன் பதிவு  முகநூல் பதிவில் இருந்து:

''ராமேஸ்வரம் கடற் பகுதியில் இருந்து சென்னை கடற்பகுதி வரை தரைக்காற்று பலமாக வீசுகிறது. இதனால், இன்றும், நாளையும் சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம்.


டெல்டா, ராமநாதபுரம் பகுதிகளில் சனிக்கிழமை முதல் நல்ல மழை இருக்கும். ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து சென்னையில் மீண்டும் மழை விளையாடத் தொடங்கும்.

வங்காள விரிகுடா கடலில் 'டாம்ரே' என்ற எந்த புயலும் உருவாகவில்லை. அவ்வாறு வரும் செய்திகளையும், வதந்திகளையும் நம்பாதீர்கள். அங்கு உருவாகி இருப்பது சாதாரண குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மட்டுமே.


 இதனால், சென்னையில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

மற்றவகையில் குறிப்பிடத்தகுந்த அளவில் பெரிய அளவிலான மழையை எதிர்பார்க்க முடியாது. ஆதலால், அடுத்து வரும் சாரலை அனுபவியுங்கள்.


 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எப்படி உருமாறுகிறது? அல்லது எப்படி நகர்கிறது? என்பதைப் பொறுத்து அடுத்த கட்ட மழை இருக்கும்.


களத்தில் இறங்கி மழை விளையாடுவது என்பது உண்மையாக ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு அல்லது திங்கட்கிழமை காலையில் இருந்துதான் தொடங்கும். ஒட்டுமொத்த வட தமிழகம் முழுமையும் 4 நாட்களுக்கு மழை இருக்கும்.


வடதமிழகத்தில் சிறப்பான மழைப்பொழிவு என்பது வரும் 12-ந்தேதி முதல் தொடங்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மூலம் மேகக்கூட்டங்கள் தமிழக கடற்கரைப்பகுதியில் உருவாகி மழைப்பொழிவைத் தரும்.


வடதமிழக கடற்கரைப்பகுதியான டெல்டா முதல் சென்னை வரை பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் மழை இருக்கும். காற்று அடிக்கும் திசை, சுழற்சி உயர்வாக இருப்பதால், சிலநேரங்களில் கனமழை பெய்யக்கூடும்.


ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கப் போகிறது. சென்னையில் மழை சிறப்பாகப் பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, அதன் சூழலும் மழைக்கு ஏற்றார் போல் இருக்கிறது.


பாம்பன் முதல் சென்னை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வடமேற்கில் இருந்து காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் காற்றின் வேகத்தால் திடீரென சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.


ஆதலால், காற்றின் வேகத்தை அறிந்து , எச்சரிக்கையுடன் செல்லவும். சென்னை முதல் ராமேஸ்வரம் கடற்கரை வரை அடுத்த 4 நாட்களுக்கு கூடுதலான காற்றுவீசக்கூடும்.


பாம்பன் பகுதியில் அதிகமான காற்றை எதிர்பார்க்கலாம். ஆதலால், பாம்பன் பாலத்தை மெதுவாக கடக்கவும்''. இவ்வாறு அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஞாயிறு இரவு முதல் களத்தில் இறங்கி மழை விளையாடும்: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு,
Tamil Nadu Weatherman  TamilNadu Weatherman on Twitter:tamilnadu weatherman report சென்னையில் ஞாயிறு இரவு முதல் களத்தில் இறங்கி மழை விளையாடும்: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு,
Tamil Nadu Weatherman  TamilNadu Weatherman on Twitter:tamilnadu weatherman report சென்னையில் ஞாயிறு இரவு முதல் களத்தில் இறங்கி மழை விளையாடும்: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு,
Tamil Nadu Weatherman  TamilNadu Weatherman on Twitter:tamilnadu weatherman report
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பில் சேர மே 6-ம் தேதி நீட் தேர்வு : சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. தனியார் மருத்துக் கல்லூரிகள் கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும், இந்த தேர்வு முறையை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.ஆனால், சி.பி.எஸ்.இ. தரத்தில் கேள்வித்தாள்

மேலும்...

 காலில் விழுவது போல் நடித்து எம்.எல்.ஏ. வை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்
போளூரில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சென்றார்.திருமண மண்டபத்தின் முன்பு சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு

மேலும்...

 அரசு பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
அரசு பஸ் கட்டண உயர்வுக்குப் பிறகு மின்சாரம் மற்றும் வெளியூர் விரைவு ரயில்களில் கணிசமாகக் கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடர்பாக தெற்கு ரயில்வே ஓரிரு நாளில் முடிவு செய்யவுள்ளது.தமிழக அரசு மாற்றியமைத்துள்ள புதிய கட்டண நிலவரப்படி, சென்னை

மேலும்...

 குடி போதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லூர்துமேரி(41). இவர்களுக்கு ஜெனிபர் டயானா(24), ஆனந்தி(23) என்ற 2 மகள்கள், ஆண்டனி(21) என்ற மகன் உள்ளனர். ஜெனிபருக்கு திருமணமாகி அருகில் உள்ள அன்னமங்கலத்தில் வசிக்கிறார். தொழுநோயால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in