சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி

சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி
'சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியானது.

ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற 'சீமராஜா' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்று தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்தியில், ''சீமராஜா படம் பார்க்க முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்" என்று ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.
https://goo.gl/ST6pT8






02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்