tamilkurinji logo
 

என்றும் இளமையுடனும் புத்துணர்ச்சியுடன் இருக்க இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger 8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil

Foods,That,Make,You,Look,Younger,,8,Foods,for,Beautiful,Skin,|,Skincare,Nutrition,Tips,endrum,ilamai,tips,in,tamil,Endrum,ilamayaga,irukka,,tamil,


என்றும் இளமையுடனும் புத்துணர்ச்சியுடன் இருக்க இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger

First Published : Friday , 14th July 2017 01:55:42 PM
Last Updated : Friday , 14th July 2017 01:55:42 PM


என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil

கீரை: கீரையில் லுட்டின் மற்றும் சீக்சாக்தைன் என்னும் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இளமைத் தோற்றத்துடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்துக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும் ஆன்டி ஆக்சிடன்ட்களான லைகோபீன் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.



நெல்லிக்காய்   -  வைட்டமின்-சி நிறைந்த நெல்லிக்காயை பச்சையாக மென்று தின்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் தாதுச்சத்துகள் அடங்கியிருப்பதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கும். உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் நெல்லிக்காய்ச் சாற்றுடன் இஞ்சிச் சாறு சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், கொழுப்பு கரையும். தேனில் ஊறவைத்த இஞ்சியை மென்று தின்பதால், செரிமானக் கோளாறு மற்றும் பல பிரச்னைகள் சரியாகும்.


குடைமிளகாய்:

குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளது. குடை மிளகாய்கள் பல வண்ணங்களில் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகளும், பீட்டா கரோட்டீனும் அதிகம் உள்ளன.


சப்போட்டாப் பழம்   

சப்போட்டாப் பழம் சாப்பிட்டுவந்தால் இளமைக்கு கியாரன்டி. தினமும் இரண்டு சப்போட்டாப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரக்கூடியது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு சப்போட்டா அருமையான மருந்தாகும். மேலும் இது இதயக்கோளாறு ஏற்படாமல் தடுக்கும்; சருமத்தை மிருதுவாக்கும்.



தக்காளி:


தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.


பழங்கள்


ஆப்பிள், மாதுளை, கேரட், சீத்தாப்பழம், மங்கூஸ், ஸ்ட்ராபெர்ரி, முந்திரி, வெள்ளரி விதைகள், பூசணி விதைகள், சிவப்பு திராட்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, பசலைக்கீரை, பீன்ஸ் உள்ளிட்ட உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

முருங்கைக்கீரை மட்டுமல்லாமல் தினமும் ஒரு கீரை உணவு, முருங்கைக்காய் போன்றவற்றை உண்பது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளை உண்பது நல்லது.


சோற்றுக்கற்றாழை  


சோற்றுக்கற்றாழை உண்மையிலேயே பெண்களுக்குக் கடவுள் கொடுத்த ஒரு வரம். தினமும் காலை வெறும் வயிற்றில் சோற்றுக்கற்றாழை சாப்பிட்டு வந்தால், இளமை என்றும் ஊஞ்சலாடும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கச்செய்யும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம். எலுமிச்சைச் சாறு, அறுகம்புல் சாறு போன்றவையும் இளமை காக்கும் அற்புத மருந்துகளாகும்.



தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர் களுக்குப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள்கூட குறையும்


வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும்.


அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் ஈடுபடலாம். காலை வேளையில் சுத்தமான காற்றைச் சுவாசிக்கும்போது, சுகமான காற்று முகத்தில் படும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.


பிறகு, அரை மணி நேரம் கழித்து சூடான ஆரோக்கிய பானம் எதையாவது பருகலாம். காலை வேளை உணவைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். மதியம், இரவு உணவுகளையும் நேரந்தவறாமல் சாப்பிட வேண்டும். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை, அளவோடு சாப்பிடுவது நல்லது.



இவை எல்லாவற்றையும்  பின்பற்றினால்  நீங்கள்   என்றும்   இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன்  இருக்க  முடியும்.


என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கறிவேப்பிலை டீ | curry leaves tea
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - ஒரு கப் தண்ணீர் - 2 கப் சீரகம் - சிறிதளவு வெல்லம் - சிறிதளவு கருப்பு உப்பு - சிறிதளவு செய்முறை : 1.சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு

மேலும்...

 அல்சர் வயிற்றுபுண் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil
அல்சர் என்பது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகை புண். இது பாதிக்கப்பட்டவரை பலவித தொந்தரவுகளுக்கு ஆளாக்கும். ஆன்டாசிட்கள் (Antacids) அல்லது ஆன்டிபயாட்டிக்ஸ்களை (Antibiotics) பயன்படுத்தி இதன் வீரியத்தை குறைக்கலாம். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளை சாப்பிடலாம்,

மேலும்...

 பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்
மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத

மேலும்...

 வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்தியம்| mouth smell treatment in tamil
காரட் சாறு எடுத்து, சர்க்கரை மற்றும் உப்பு என எதுவும் சேர்க்காமல் வெறுமனே குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்களுக்கு சாப்பிட்டால் உங்கள் வாய் நாற்றம் காணாமல் போய்விடும்.ஒரு  ஸ்பூன்  தேன் , அரை  ஸ்பூன் பட்டைதுாள் , இரண்டு  எலுமிச்சை  

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in