tamilkurinji logo
 

ஆர்.கே.நகர் வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll.

Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll.


செய்திகள் >>> தமிழகம்

ஆர்.கே.நகர் வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்

First Published : Tuesday , 5th December 2017 07:30:46 PM
Last Updated : Tuesday , 5th December 2017 07:30:46 PM


ஆர்.கே.நகர்  வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll.

 ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே  7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பிரதான கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் நேற்று மனுதாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரும் நேற்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.

ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று பிற்பகல் வாக்கில் விஷாலின் வேட்புமனுவை ஏற்க கூடாது என தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.


 இதை தொடர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் அவரது மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் இன்று மாலை இந்த அறிவிப்பு வெளியானதால் பெரும் பரபரப்பு உருவானது.

இதைதொடர்ந்து, ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலகத்துக்கு மாலை ஐந்தரை மணியளவில் விரைந்து வந்த நடிகர் விஷால் தன்னை ஆதரித்து முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வாக்குவாதம் செய்தார். இதை அவர் ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து தேர்தல் அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் தண்டையார் பேட்டை சாலையில் அமர்ந்து நடிகர் விஷால் திடீர் மறியலில் ஈடுபட்டார். விரைந்துவந்த போலீசார் விஷாலிடம் சமரசம் பேசி தேர்தல் அலுவகத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு தேர்தல் அதிகாரியிடன் விஷால் தற்போது பேசி வருகிறார்.




ஆர்.கே.நகர்  வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll. ஆர்.கே.நகர்  வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll. ஆர்.கே.நகர்  வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll.
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து

மேலும்...

 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை
உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடிதிருப்பூர்:திருப்பூர் மாவட்டம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in