கர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர்

கர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர்
கர்ப்பிணி மனைவி முன்னால் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்த ப்ரனய் பெருமல்லா, அம்ருதாவிற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகதான் திருமணம் நடைபெற்றுள்ளது.

ப்ரனய் பெருமல்லா தன்னுடைய மனைவி அம்ருதாவுடன் அங்குள்ள ஜோதி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அம்ருதா மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார், அவரை பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது அடையாளம் தெரியாத மர்ம நபர், பெருமல்லாவை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

 இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது என்று யோசிக்கும் முன்பே மர்மநபர், பெருமல்லாவை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
அருகிலிருந்தவர்களின் உதவியை கோரும் அம்ருதா, மருத்துவமனைக்குள் வேகமாக ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருமல்லா எஸ்.சி. பிரிவை சேர்ந்தவர் என்றும் அம்ருதா உயர் வகுப்பை சேர்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
https://goo.gl/BxNcwY






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது