tamilkurinji logo
 

கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,



செய்திகள் >>> தமிழகம்

கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி

First Published : Monday , 16th April 2018 08:07:22 PM
Last Updated : Monday , 16th April 2018 08:07:22 PM


கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

கடலூர் மாவட்டம் தியாகவள்ளியை அடுத்த நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 28). விவசாயி. இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தங்கபாண்டியனின் தாய்-தந்தை மற்றும் சகோதரர் மருதுபாண்டி அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று குறைகேட்பு கூட்டத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.

அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த தண்ணீர் கேனை வெளியே எடுத்தனர். அதில் இருந்த பெட்ரோலை தங்கப்பாண்டியன் உள்பட 16 பேரும் தங்களது உடலில் திடீரென்று ஊற்றி கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் தீக்குளிக்க முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடிச்சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.

பின்னர் அவர்கள் 16 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர். அவர்களிடம் இருந்த கேனை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் தங்கப்பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தங்கப்பாண்டியன் வைத்திருந்த மனுவை போலீசார் கைப்பற்றினர்.

நான் எனது தாயுடன் நொச்சிக்காட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தேன்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் எங்களைப் பார்த்து இந்த வழியாக நீங்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை. வேறு வழியாக செல்லுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் என்னையும், எனது தாயையும் திட்டி தாக்கினார். இதேபோல் இதற்கு முன்பு பலமுறை எங்கள் மீது அந்த வாலிபர் எங்களுடன் இதே காரணத்துக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாங்கள் எந்த வழியில் நடந்து செல்வது என்று தெரியவில்லை.

எங்களுக்கு வழிப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் எங்களை தாக்கிய அந்த வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்
கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை என்று கவர்னருக்கு பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் பதில் அளித்து உள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது 'தி வீக்'

மேலும்...

 இரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது
அயனாவரத்தில், கோபத்தில் காதலி கழுத்தை அறுக்க காதலன் முயன்றதில் காதலிக்கு கையில் காயம் ஏற்பட்டது, தப்பி ஓட முயன்ற காதலனை போலீஸார் கைது செய்தனர்.அயனாவரத்தில் வசிப்பவர் ரேணுகா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு

மேலும்...

 நிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)

மேலும்...

 பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது. அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in