கவுதமியின் சம்பள பாக்கி புகாருக்கு கமல்ஹாசன் விளக்கம்

கவுதமியின் சம்பள பாக்கி புகாருக்கு கமல்ஹாசன் விளக்கம்
கவுதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் கம்பெனியில் அதிகாரிகள் இருக்கிறார் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனக்கு அவர் சம்பள பாக்கி வைத்து இருக்கிறார் என்று கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை கவுதமி கூறினார்.

இது பற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியில், கமலுடன் இணைந்து செயல்பட்டபோது அவருடைய ராஜ்கமல் பட நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினேன்.

வேறு பட அதிபர்கள் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தேன். அதன்மூலம் எனக்கு வருமானம் வந்தது.

கமல்ஹாசன் நடித்துள்ள தசாவதாரம், விஸ்வரூபம் படங்களிலும் பணியாற்றினேன். ஆனால் அந்த படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை.


அந்த பணம் எனது வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது. சம்பள பாக்கியை வசூலிக்க பல முறை முயன்றும் கிடைக்கவில்லை என தெரிவித்து இருந்தார்.

இது குறித்து பேட்டி அளித்த கமல்ஹாசன் கவுதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் ராஜ்கமல் இன்டர் நேஷனல் நிறுவனம் வழங்கும் என்று கூறினார்.

ஸ்ரீதேவியின் மரணத்தை அடுத்து அவர்களது குடும்பத்தாரிடம் ஆறுதல் சொல்வதற்காக நேற்று தினம் மும்பை சென்றிருந்தார். அங்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தசாவதாரம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த தனக்கு கமல் ஊதியத்தை வழங்கவில்லை என்றும் அது தனது வாழ்க்கைக்கு முக்கியமாக தேவைப்படுவதாகவும் கவுதமி டுவிட்டரில் புகார் அளித்தது குறித்து கமலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லை என்று கவுதமி கூறுவது சரிதான். சம்பள பாக்கி இருப்பது உண்மையாக இருந்தால் அதை கம்பெனி அவருக்கு வழங்கும். அதற்கென அங்கு அதிகாரிகள் உள்ளனர். அந்த விவகாரத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

ஆந்திராவில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்த கேள்விக்கு  பதில்  அளித்த கமல் சட்டவிரோத செயல்களில் தமிழர்கள் ஈடுபடக்கூடாது.


ஆந்திரா செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு தேவை,

தமிழகத்தில் பல மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக படிக்கின்றனர் அதுபோல பிற மாநிலத்திலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.

விழுப்புரம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
https://goo.gl/gPzQV2


13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்

10 Dec 2018

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்

25 Oct 2018

மீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்

25 Oct 2018

தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு