tamilkurinji logo
 

கார்த்தி சிதம்பரத்துக்கு 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: திஹார் சிறையில் தனி அறை கோரிக்கை நிராகரிப்பு,Karti Chidambaram News: Latest News and Updates on Karti ..

Karti,Chidambaram,News:,Latest,News,and,Updates,on,Karti,..



செய்திகள் >>> இந்தியா

கார்த்தி சிதம்பரத்துக்கு 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: திஹார் சிறையில் தனி அறை கோரிக்கை நிராகரிப்பு

First Published : Monday , 12th March 2018 07:17:09 PM
Last Updated : Monday , 12th March 2018 07:17:09 PM


கார்த்தி சிதம்பரத்துக்கு 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: திஹார் சிறையில் தனி அறை கோரிக்கை நிராகரிப்பு,Karti Chidambaram News: Latest News and Updates on Karti ..

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை வரும் 24-ம் தேதிவரை திஹார் சிறையில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அதேசமயம், தான் முன்னாள் மத்திய அமைச்சரின் மகன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதால், சிறையில் தனி அறை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.306 கோடி முதலீடு பெற சட்டவிரோதமாக கார்த்திசிதம்பரம் உதவியாகவும், இதற்காக 7லட்சம் அமெரிக்க டாலர் கையூட்டு பெற்றதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 28-ம்தேதி சென்னை விமானத்தில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அதன்பின் பல கட்டமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடைசியாக 3 நாள் காவல் முடிந்து, கார்த்தி சிதம்பரத்தை இன்று நீதிமன்றத்தில் நீதிபதி சுணில் ராணா முன் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே. சர்மா வாதிடுகையில், கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். இதற்கு முன் சிபிஐ காவலில் இருந்த போது, கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் ஒத்துழைப்பு இன்றி சிபிஐயால் எந்தவிதமான விசாரணையும் நடத்த இயலாது.

தற்போதுள்ள சூழலில் குற்றம் சாட்டப்பட்டருக்கு எதிரான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவருக்கு ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் வெளியில் சென்று ஆதாரங்களை அழிக்கும் வேலையில் ஈடுபடும் அளவுக்கு செல்வாக்கு மிகுந்தவர் எனத் தெரிவித்தார்.

முன்னதாக கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதை தள்ளுபடி செய்த நீதிபதி சுணில் ராணா, கார்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை கூடுதலாக 15 நாட்கள் நீட்டித்து, அதாவது வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்க ஆணையிட்டார்.


இதற்கிடையே கார்த்தி சிதம்பரம் சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரின் மகன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர் என்பதால், திஹார் சிறையில் தனி அறை வேண்டும் என்று கோரிக்கை இருந்தார். இதை நிராகரித்த நீதிபதி, திஹார் சிறை என்பது பலகட்ட அடுக்கு பாதுகாப்பு கொண்டது. அதில் எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடுகளும் இருக்காது. இருப்பினும் காரத்தி சிதம்பரத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவுவிடுகிறேன் எனத் தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரத்துக்கு 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: திஹார் சிறையில் தனி அறை கோரிக்கை நிராகரிப்பு,Karti Chidambaram News: Latest News and Updates on Karti .. கார்த்தி சிதம்பரத்துக்கு 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: திஹார் சிறையில் தனி அறை கோரிக்கை நிராகரிப்பு,Karti Chidambaram News: Latest News and Updates on Karti .. கார்த்தி சிதம்பரத்துக்கு 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: திஹார் சிறையில் தனி அறை கோரிக்கை நிராகரிப்பு,Karti Chidambaram News: Latest News and Updates on Karti ..
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை
புனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு

மேலும்...

 மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
நாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், 500 ரூபாய் அச்சடிப்பது குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. அதன்பின்

மேலும்...

 உடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்
குஜராத்தின் சூரத் நகரில் 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் 86 இடங்களில் காயங்கள் இருந்தன.சூரத் நகரின் பெஸ்தான் பகுதி கிரிக்கெட் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும்...

 கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்
கர்நாடக தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இன்று குல்பர்காவில் பாஜகவினர் அவரது காரை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் கடுமையாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in