tamilkurinji logo
 

உடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்,Surat girl found dead with 86 injuries may have been raped, tortured, strangled

Surat,girl,found,dead,with,86,injuries,may,have,been,raped,,tortured,,strangled



செய்திகள் >>> இந்தியா

உடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்

First Published : Monday , 16th April 2018 11:43:59 AM
Last Updated : Monday , 16th April 2018 11:43:59 AM


உடலில் 86 காயங்களுடன் சடலமாக  சிறுமி மீட்பு  குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்,Surat girl found dead with 86 injuries may have been raped, tortured, strangled

குஜராத்தின் சூரத் நகரில் 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் 86 இடங்களில் காயங்கள் இருந்தன.

சூரத் நகரின் பெஸ்தான் பகுதி கிரிக்கெட் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சூரத் நகர போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் அவரது உடலில் 86 இடங்களில் காயங்கள் இருந்தன.

இதுகுறித்து பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் கணேஷ் கோவக்கர் கூறியபோது, “சுமார் ஒரு வாரம் வரை அவர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது, “சிறுமியின் உள் உறுப்புகள் சேதமடைந்துள்ளன. டெல்லி மருத்துவ துணை மாணவி போன்று இந்த சிறுமியும் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

உயிரிழந்த சிறுமி யார் என்பது தெரியவில்லை. அவரை குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.20,000 பரிசு வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்துள்ளனர். சூரத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1,200 போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களிலும் உதவி கோரப்பட்டுள்ளது.

சூரத் நகர போலீஸ் கமிஷனர் கூறியபோது, “ஒடிசா, மேற்கு வங்கம் அல்லது வேறு மாநிலத்தில் இருந்து சிறுமியை கடத்தி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். காணாமல்போன 8,000 குழந்தைகளின் விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம். உயிரிழந்த சிறுமியின் டிஎன்ஏ எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

உடலில் 86 காயங்களுடன் சடலமாக  சிறுமி மீட்பு  குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்,Surat girl found dead with 86 injuries may have been raped, tortured, strangled உடலில் 86 காயங்களுடன் சடலமாக  சிறுமி மீட்பு  குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்,Surat girl found dead with 86 injuries may have been raped, tortured, strangled உடலில் 86 காயங்களுடன் சடலமாக  சிறுமி மீட்பு  குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்,Surat girl found dead with 86 injuries may have been raped, tortured, strangled
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை
புனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு

மேலும்...

 பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்
பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in