tamilkurinji logo


 

உ.பி.யில் தள்ளுவண்டியில் சடலத்தை இழுத்து சென்ற அவலம்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> இந்தியா

உ.பி.யில் தள்ளுவண்டியில் சடலத்தை இழுத்து சென்ற அவலம்

First Published : Tuesday , 13th March 2018 07:19:00 PM
Last Updated : Tuesday , 13th March 2018 07:19:00 PM


உ.பி.யில்  தள்ளுவண்டியில் சடலத்தை இழுத்து சென்ற அவலம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

உத்தரபிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்காததால் இறந்த மனைவியின் உடலை தள்ளு வண்டியில் வைத்து கூலி தொழிலாளி ஒருவர் 5 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
 
மைன்புரி மாவட்டம் ஹரிகாபூர் கிராமத்தைச் சேர்ந்த கன்ஹாயாலால் மனைவி சோனிக்கு நேற்று காலை திடீரென்று கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

 உடனடியாக மைன்புரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் கொடுக்காததால் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு சோனியின் சடலத்தை தள்ளு வண்டியில் வைத்து கன்ஹாயாலால் இழுத்துச் சென்றார்.

அதில் வயதான தாயாரையும் அமர வைத்து அவர் தள்ளிச் சென்ற காட்சிகள் காண்போர் நெஞ்சங்களை பதைபதைக்க வைக்கிறது.

 ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்து உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத வரை மோசமான அவலங்கள் தொடரும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்

உ.பி.யில்  தள்ளுவண்டியில் சடலத்தை இழுத்து சென்ற அவலம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

உ.பி.யில்  தள்ளுவண்டியில் சடலத்தை இழுத்து சென்ற அவலம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

உ.பி.யில்  தள்ளுவண்டியில் சடலத்தை இழுத்து சென்ற அவலம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் உயிருடன் இருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல்
 நடிகை சோனாலி பிந்த்ரே காலமாகிவிட்டார்” என இரங்கல் செய்தி வெளியிட்ட எம்.எல்.ஏ ராம் கதமின் டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, “புகழ்பெற்ற நடிகை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in