tamilkurinji logo
 

உ.பி. மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி,Gorakhpur Hospital Tragedy Live: UP Govt Suspends Principalnews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Gorakhpur,Hospital,Tragedy,Live:,UP,Govt,Suspends,Principalnews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

உ.பி. மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி

First Published : Saturday , 12th August 2017 07:20:38 PM
Last Updated : Saturday , 12th August 2017 07:20:38 PM


உ.பி.  மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி,Gorakhpur Hospital Tragedy Live: UP Govt Suspends Principalnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி (ஆகஸ்ட் 7) முதல் 11-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 60 குழந்தைகள் பலியானது தெரியவந்துள்ளது.

கடந்த இரு தினங்களில் மட்டும் 30 குழந்தைகள் பலியாகியுள்ளனர். மருத்துவமனைக்கு பிராண வாயு விநியோகித்துவந்த தனியார் ஒப்பந்ததாரர் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியதன் காரணத்தாலேயே குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை தரப்பில், "கடந்த 7-ம் தேதி (ஆகஸ்ட் 7) முதல் 11-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 60 குழந்தைகள் பலியாகினர். ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் மட்டும் 30 குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர். இவர்களில் 12 பேர் மூளைக் காய்ச்சல் நோய் பாதிப்பு காரணமாக இறந்தனர். எஞ்சியவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகிக்கப்படாததால் மூச்சுத் திணறல் காரணமாக பலியாகினர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேச சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத், மருத்துவக் கல்வி அமைச்சர் அசுதோஷ் டண்டன் ஆகியோர் கோரக்பூர் விரைந்துள்ளனர். மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங்கும் சென்றுள்ளனர். ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தின் காரணமாகவே குழந்தைகள் பலியானதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கோரக்பூர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 60 குழந்தைகள் பலியான சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சியினர் உண்மை என்னவென்று வெளியாவதற்கு முன்னதாகவே அவசர கதியில் ஆளும் கட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கைகளை வெளியிடுவதாக துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் இறந்த சம்பவத்தால் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் தொடர்ந்து வந்துசெல்வதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உ.பி.  மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி,Gorakhpur Hospital Tragedy Live: UP Govt Suspends Principalnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
உ.பி.  மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி,Gorakhpur Hospital Tragedy Live: UP Govt Suspends Principalnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
உ.பி.  மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி,Gorakhpur Hospital Tragedy Live: UP Govt Suspends Principalnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 போலீஸ் மீது மிளகாய் பொடியை தூவி கொலை குற்றவாளியை மீட்டுச் சென்ற கூட்டாளிகள்
டெல்லியில், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, போலீஸார் கண்களில் மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தி அந்த நபரை கூட்டாளிகள் மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஹரியாணா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். கிழக்கு

மேலும்...

 நீரவ் மோடியை போல இன்னொரு தொழிலதிபர் 5 வங்கியில் 800 கோடி மோசடி
மேலும் ஒரு தொழில் அதிபர் வங்கிகளில் ரூ.800 கோடி மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பி ஓடிவிட்டார்.மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் சில அதிகாரிகள் துணையுடன் வங்கி உத்தரவாத கடிதத்தை போலியாக பெற்று சர்வதேச

மேலும்...

 3வது திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான்.  கடந்த 1992ம் ஆண்டு உலக கோப்பையை இவரது

மேலும்...

 காதல் திருமணம் செய்த இளம் பெண் வங்காளத்தில் மர்மமான முறையில் மரணம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் பூர்ணாதேவி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த ரிமுஷேக்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in