tamilkurinji logo
 

அடுத்தடுத்த ரயில் விபத்து - மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய முடிவு,Railways Minister Suresh Prabhu Meets PM Narendra Modi, Suggests news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Railways,Minister,Suresh,Prabhu,Meets,PM,Narendra,Modi,,Suggests,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ் ,


செய்திகள் >>> இந்தியா

அடுத்தடுத்த ரயில் விபத்து - மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய முடிவு

First Published : Wednesday , 23rd August 2017 07:23:42 PM
Last Updated : Wednesday , 23rd August 2017 07:23:42 PM


அடுத்தடுத்த ரயில் விபத்து -  மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய முடிவு,Railways Minister Suresh Prabhu Meets PM Narendra Modi, Suggests news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


கடந்த 5 நாட்களில் இரு பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்ததால் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா முடிவை தெரிவித்ததாக சுரேஷ் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இரு ரயில் விபத்துகளுக்கும் முழுமையாக தாமே பொறுப்பேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


துரதிருஷ்டவசமான விபத்துக்கள், மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் மூலம் தாம் வேதனை அடைந்துள்ளதாக கூறியுள்ளார். தமது ராஜினாமா விவகாரத்தில் பிரதமர் தனது முடிவை இன்னும் தெரிவிக்கவில்லை. அவசரப்பட வேண்டாம் பொறுத்திருங்கள் என தம்மை அவர் அறிவுறுத்தியுள்ளதாக சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை ரயில்வே வாரியத்தலைவர்  தனது பதவியை ராஜினாமா செய்தார்.  ரயில்வே வாரியத்தலைவர் ஏ.கே.மிட்டல்  தனது  ராஜினாமா கடிதத்தை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அனுப்பினார். கடந்த வாரம் உ.பி.யில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதையடுத்து அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.

முன்னதாக இன்று அதிகாலை உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே ஹைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரில் இருந்து டெல்லிக்கு செல்லும் கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 2 .50 மணி அளவில் அலிகர் அருகே ஆரையா எனுமிடத்தில் தடம் புரண்டது.  

இந்த விபத்தில் ரயில் இன்ஜினுடன் சேர்த்து 10 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், 100 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை.

இதே போல கடந்த சனிக்கிழமையன்று மாலை 5.45 மணியளவில், உத்தரப் பிரதேசம் முசாபர்நகர் அருகேயுள்ள காதவுலி என்ற இடத்தில் தடம் புரண்டது. இதில், எஸ்1 முதல் எஸ் 10 வரை இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், ஏசி பெட்டிகளில் பி1, ஏ1 பெட்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்தன. இந்த விபத்தில் 23  பேர் பலியாகினர். 156 பேர் காயம் அடைந்தனர்.
 தண்டவாள பராமரிப்பு பணிகள் குறித்து உரிய தகவல் தெரிவிக்காத அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த பெரும் விபத்து நேரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துகளால் எழுந்த விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் ராஜினாமா முடிவை எடுத்துள்ளார் மத்திய அமைச்சர். இவ்விரு அடுத்தடுத்த விபத்துகளுக்கும் பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்தடுத்த ரயில் விபத்து -  மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய முடிவு,Railways Minister Suresh Prabhu Meets PM Narendra Modi, Suggests news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

 அடுத்தடுத்த ரயில் விபத்து -  மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய முடிவு,Railways Minister Suresh Prabhu Meets PM Narendra Modi, Suggests news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

 அடுத்தடுத்த ரயில் விபத்து -  மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய முடிவு,Railways Minister Suresh Prabhu Meets PM Narendra Modi, Suggests news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஒரே பள்ளியில் வேலை காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதி பணி நீக்கம்
காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 200 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இங்கு வேலை பார்த்து வந்த ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் காதலித்து வந்ததாக

மேலும்...

 எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு உரிய நீதி ஒதுக்கீடு செய்வதுடன், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிரந்தரமாக போட்டியிட தடை கோரி

மேலும்...

 காட்டி கொடுத்த மட்டன் சூப் காதலன் உதவியால் கணவனை கொன்ற மனைவி
கணவன் இடத்தில் காதலனை கொண்டுவர நாடகமாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக கணவன் கொல்லப்பட்டதும், காதலன் அடையாளத்தை மறைக்க அவரது முகம் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (32). இவரது மனைவி

மேலும்...

 இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே
கடந்த 2011 ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இவர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது டில்லி முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in