tamilkurinji logo


 

அதிபர் பதவி விலகிய பிறகு புது வீட்டில் குடியேறிய ஒபாமா,Obamas Are Settling into Their Rented D.C. Home

Obamas,Are,Settling,into,Their,Rented,D.C.,Home




செய்திகள் >>> உலகம்

அதிபர் பதவி விலகிய பிறகு புது வீட்டில் குடியேறிய ஒபாமா

First Published : Monday , 6th February 2017 11:40:47 AM
Last Updated : Monday , 6th February 2017 11:40:47 AM


அதிபர் பதவி விலகிய பிறகு புது வீட்டில் குடியேறிய ஒபாமா,Obamas Are Settling into Their Rented D.C. Home

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பராக் ஒபாமா விலகினார். அவருக்கு பிறகு டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றுள்ளார்.

அதை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ஒபாமா அங்கிருந்து குடும்பத்துடன் வெளியேறினார்.

இந்த நிலையில் அவர் தலைநகர் வாஷிங்டன் அருகேயுள்ள கலோரமா என்ற இடத்தில் புதிய வீட்டில் குடியேறியுள்ளார். அது 8200 சதுர அடி பரப்பளவு கொண்டது.

9 படுக்கை அறைகள், 8-க்கும் மேற்பட்ட பாத்ரூம்கள், டைனிங் ரூம், விருந்தினர் தங்கும் அறை என சகல வசதிகள் கொண்டது. இது முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் செய்தி துறை செயலாளர் ஜோலாக் கர்ட்டுக்கு சொந்தமானது. அவரிடம் இருந்து இந்த வீட்டை ஒபாமா ‘லீசு’க்கு எடுத்து தங்கியுள்ளார். இவரது புது வீட்டுக்கு அருகே முன்னாள் எம்.பி., மற்றும் பிரான்ஸ் தூதர் மற்றும் அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் வீடுகள் உள்ளன.

பதவி விலகியதும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் தலைநகர் வாஷிங்டனை விட்டு வெளியேறி விடுவார். ஆனால் ஒபாமா அங்கேயே தங்கியுள்ளார். ஏனெனில் அவரது இளைய மகள் சாஷா (15) தற்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.

அதிபர் பதவி விலகிய பிறகு புது வீட்டில் குடியேறிய ஒபாமா,Obamas Are Settling into Their Rented D.C. Home அதிபர் பதவி விலகிய பிறகு புது வீட்டில் குடியேறிய ஒபாமா,Obamas Are Settling into Their Rented D.C. Home அதிபர் பதவி விலகிய பிறகு புது வீட்டில் குடியேறிய ஒபாமா,Obamas Are Settling into Their Rented D.C. Home
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in