tamilkurinji logo
 

அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

tamil,news,,tamilseithigal,,,indiaseithigal,indianews,,tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள்,,தமிழ்,சினிமாசெய்திகள்


செய்திகள் >>> தமிழகம்

அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

First Published : Thursday , 10th August 2017 12:56:38 PM
Last Updated : Thursday , 10th August 2017 12:56:38 PM


அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்


அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுகிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அம்மா அணி அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டினார். அப்போது அணிகள் இணைப்பு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்குவது பற்றியும் பேசப்பட் டது. அவர்கள் இருவரையும் நீக்கி தீர்மானம் இயற்றப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அணிகளை இணைக்க இரு அணி தலைவர்களும் சம்மதித்து விட்டதால், அதை அமல்படுத்துவது எப்போது என்று ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு பா.ஜ.க. உதவிக்கரம் நீட்டியுள்ளது. டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) துணை ஜனாதிபதியாக வெங்கய்யா நாயுடு பதவி ஏற்கும் விழா நடைபெற உள்ளது.

அந்த விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இன்று டெல்லி செல்கிறார்கள். அவர்களுடன் அவர்களது முக்கிய ஆதரவாளர்களும் உடன் செல்கிறார்கள்.

நாளை துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழா முடிந்ததும் டெல்லியில் இரு அணி தலைவர்களும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அணிகள் இணைப்புக்கான  புதிய உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விவகாரத்தில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது. மேலும்  பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவி என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய சமரச உடன்படிக்கை வேறு  விதமாக இருக்கும் என்று ஆங்கில பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக நீடிப்பார், துணை முதல்வர் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் ஏற்பார்” என்று கூறப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர் துணை முதல்-அமைச்சர் பதவியுடன் கட்சி பொதுச் செயலாளராகவும் இருப்பார் என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. அதாவது ஆட்சி எடப்பாடிக்கும் கட்சி ஓ.பி.எஸ்.சுக்கும் என்ற ரீதி யில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பிறகு அமைச்சரவையில் சிறு மாற்றம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், செம்மலை இருவரும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறும் போது வரும் 15-ம் தேதிக்குள், அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என கூறினார்.


அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து

மேலும்...

 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் மனைவி பேட்டி
கொள்ளையர்களை பிடிக்க அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் என மனைவி பானுரேகா கூறினார்.சென்னை கொளத்தூரில்  புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில்  மேற்பகுதியில் துளையிட்டு நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு

மேலும்...

 ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை
நகைக்கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.சென்னை கொளத்தூர் ஸ்ரீநகர் அனெக்ஸ் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 37). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 15 வருடங்களாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in