tamilkurinji logo
 
அதிமுக தலைமைக் கழகத்துக்குள் நுழைய மதுசூதனனுக்கும், எனக்கும் மட்டுமே உரிமை: ஓ. பன்னீர்செல்வம் ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்

செய்திகள் >>> தமிழகம்

அதிமுக தலைமைக் கழகத்துக்குள் நுழைய மதுசூதனனுக்கும், எனக்கும் மட்டுமே உரிமை: ஓ. பன்னீர்செல்வம்

First Published : Tuesday , 8th August 2017 12:07:09 PM
Last Updated : Tuesday , 8th August 2017 12:07:09 PM

அதிமுக தலைமைக் கழகத்துக்குள் நுழைய மதுசூதனனுக்கும், எனக்கும் மட்டுமே உரிமை:  ஓ. பன்னீர்செல்வம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

அதிமுக தலைமைக் கழகத்துக்குள் நுழைய ஜெயலலிதாவால் பொறுப்பில் அமர்த்தப்பட்ட மதுசூதனனுக்கும், எனக்கும் மட்டுமே உரிமை உள்ளது. வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக (புரட்சித் தலைவி அம்மா அணி) சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நூற்றாண்டு விழா மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

அப்போது, முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவது, டெங்கு ஒழிப்பை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் கொடுத்திருந்தோம்.

ஆனால், ஆர்ப்பாட்டத்தை அறிவிப்பதற்கு முன்பே இத் தகவல் வெளியில் தெரிந்து, திமுகவைச் சேர்ந்த துரைமுருகனுக்கு கோபம் வருகிறது. காரணம், அவர்கள் ஆளும் கட்சியோடு கூட்டணி அமைத்து விட்டார்கள்.

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும்.

கமல் சிறந்த நடிகர். தமிழர். தமிழர் பிரச்சினையை பேசுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆளும் கட்சி தனது குறையை திருத்திக் கொள்ளாமல் செயல்படுகிறது.

ஜெயலலிதாவுக்காக வேண்டிக் கொண்டு திருப்பதி சென்று முடிக் காணிக்கை செலுத்தியபோது, கோயில் நிர்வாகியுடன் சேகர் ரெட்டியும் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். மற்றபடி, அவரை எனக்குத் தெரியாது.

என் மீது குற்றம் இருந்தால் வழக்கு தொடருங்கள். சந்திக்க நான் தயார். மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை.

தலைமைக் கழகத்துக்குள் நுழைவதற்கு ஜெயலலிதாவால் பொறுப்பில் அமர்த்தப்பட்ட மதுசூதனனுக்கும், எனக்கும் மட்டுமே உரிமை உள்ளது. வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் என்னை தோற்கடிக்க பல சதிகள் நடந்தன. கட்சியில் நான் தொண்டனுக்கும், தொண்டனாகப் பணியாற்றியவன். ஒரு சேவகனாகப் பணியாற்றியவன். எங்கள் தர்ம யுத்தம் வெற்றிபெற நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

கூட்டத்தில், அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, செம்மலை, பாண்டியராஜன், ராஜகண்ணப்பன், ஜெயபால், சண்முகநாதன், மைத்ரேயன் எம்பி, முன்னாள் எம்பி பிரபாகரன், மனோஜ்பாண்டியன் மற்றும் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்

அதிமுக தலைமைக் கழகத்துக்குள் நுழைய மதுசூதனனுக்கும், எனக்கும் மட்டுமே உரிமை:  ஓ. பன்னீர்செல்வம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
அதிமுக தலைமைக் கழகத்துக்குள் நுழைய மதுசூதனனுக்கும், எனக்கும் மட்டுமே உரிமை:  ஓ. பன்னீர்செல்வம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
அதிமுக தலைமைக் கழகத்துக்குள் நுழைய மதுசூதனனுக்கும், எனக்கும் மட்டுமே உரிமை:  ஓ. பன்னீர்செல்வம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கள்ளக்காதலனுடன் சேர்ந்து அக்காவை கொலை செய்த இளம்பெண்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 28). இவருடைய மனைவி நதியா (24), மகள் தக்‌ஷிதா (4), மகன் சுதர்சன் (2). பூபாலன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் சொந்தமாக வீடுகட்டி குடியிருந்து வருகிறார். பனியன் நிறுவனங்களில்

மேலும்...

 தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில்
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று அசத்தினார்.ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை

மேலும்...

 தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்துள்ளது - மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்காமல், தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது என தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-உள்ளாட்சி தேர்தலை நடத்தும்

மேலும்...

 ரூ.824 கோடி வங்கி மோசடி: கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமாரிடம் சிபிஐ தீவிர விசாரணை
வருமானத்தை அதிகமாக காட்டி 14 வங்கிகளில் கடன் வாங்கி ரூ.824 கோடியை  திருப்பிக்கட்டாமல் மோசடி செய்த கனிஷ்க் நிறுவன உரிமையாளர் புபேஷ்குமார் சென்னையில் சிபிஐ வசம் சிக்கியுள்ளார். மோசடி வழக்கில் பூபேஷ்குமாரை சிபிஐ தீவிரமாக தேடி வந்தது. ஸ்டேட் வங்கி புகாரின்

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in