அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு
உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று நடைபெறுகிறது.


இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்க்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.


நேற்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இருவருமே அமெரிக்காவின் எதிர்கால நிலையை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் ஆதரவு தெரிவித்தனர்.

 வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஐஎஸ் தீவிரவாதி இயக்கமும், தேர்தலை சீர்குழைக்க போவதாக அல்கொய்தா அமைப்பும் எச்சரிக்கை விடுத்திருப்பதால் அமெரிக்காவில் வரலாறு காணாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. முறைகேடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் 14,63,11,000 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


இவர்களில் 4 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி ஏற்கனவே ஓட்டு போட்டுவிட்டனர். மக்கள் அளிக்கும் வாக்குகளை தவிர தேர்வாளர்கள் வாக்குகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 538 வாக்குகளில் 270 வாக்குகளை பெறுபவர்களே வெற்றி பெற்று அதிபராக முடியும். ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால், அமெரிக்க அதிபர் ஆகும் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை படைப்பார். டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால், அமெரிக்க அதிபர் பதவியில் அமரும் மிக வயதானவர் என்ற நிலையை பெறுவார்.
https://goo.gl/ztxJUL


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே