அம்பானி சகோதரர்களின் நிறுவனங்கள் ரூ.1,200 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம்

அம்பானி சகோதரர்களின் நிறுவனங்கள் ரூ.1,200 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம்
முகேஷ், அனில் அம்பானி சகோதாரர்களின் நிறுவனங்களுக்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.1,200 கோடிக்கு ஒப்பந்தம் ஒன்று கையப்பம் ஆகியுள்ளது. இவர்களது தந்தை திருபாய் அம்பானி மறைவுக்கு பின் கடந்த 2005-ஆம் ஆண்டில் அம்பானி நிறுவனங்கள் பிரிக்கப்பட்டன. அதன் பிறகு முதன்முறையாக அம்பானி நிறுவனங்களுக்கிடையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 4ஜி எனப்படும் நான்காவது தலைமுறையினருக்கான அகண்ட அலைவரிசை சேவையில் களமிறங்க உள்ளது. இதற்காக அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் இரண்டு நிறுவனங்களும் பயன்பெறும் என கே.ஆர். சோக்ஸி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவன் சோக்சி தெரிவித்தார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் வசதியை பயன்படுத்துவதால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் தொலைத்தொடர்பு சேவையில் வலுவாக காலூன்ற முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2010-ஆம் ஆண்டில் 4ஜி அலைவரிசை ஒதுக்கீட்டை நாடு தழுவிய அளவில் பெற்றது. ஆனால் இதுவரை இந்தச் சேவையில் களமிறங்கவில்லை. இந்த அலைவரிசையை செல்போன் சேவைக்கும் பயன்படுத்த மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து முகேஷ் அம்பானியால் மீண்டும் செல்போன் சேவையில் களமிறங்க முடியும்.

இந்த ஒப்பந்தத்தால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன்சுமை குறையும். கடந்த 2012 டிசம்பர் 31-ந் தேதி நிலவரப்படி இந்நிறுவனத்துக்கு ரூ.37,360 கோடி கடன் உள்ளது. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட செய்தி வெளியானதையடுத்து இந்நிறுவன பங்கின் விலை செவ்வாய்க்கிழமை அன்று 10.86 சதவீதம் அதிகரித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை 2 சதவீதம் உயர்ந்தது.  

https://goo.gl/CBtwGm


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்