அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் - ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் -  ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம், களத்தில் இறங்கி பணியாற்றுங்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், புதிய கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரையில் 26 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குமரி, நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ரஜினி காந்த் வீடியோ மூலமாக பேசியதாவது:-

இந்த கூட்டம் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க தயாராகுங்கள்.

நீங்கள் அனைவரும் ஒரு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும். அதன் மூலமே நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்காக நீங்கள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்ற வேண்டும். பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தை பார்த்து வியக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

மக்கள் மன்றத்தில் பொறுப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை உரிய நேரத்தில் அது தேடி வரும். அதே நேரத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒற்றுமையுடன் நாம் பணியாற்றினால் நல்லதே நடக்கும். ஆண்டவன் நம்மோடு இருக்கிறார். எல்லாவற்றிக்கும் மேலாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு மேல் நான் இருக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
https://goo.gl/W3JwKR


18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்